tamilnadu

img

அரசு ஊழியர் சங்க தலைவராக மு.அன்பரசு, பொதுச்செயலாளராக ஆ.செல்வம் தேர்வு

சென்னை, டிச. 19- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவ ராக மு.அன்பரசு, பொதுச் செயலாளராக ஆ. செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள கே.ஆர்.சங்கரன் நினைவரங்கில் (ராம லட்சுமி பாரடைஸ்) டிசம்பர் 18.19 தேதிகளில் நடைபெற்ற சங்கத்தின் மாநில மாநாட்டில் இவர்களுடன் மற்ற நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு  தலைமையில்  நடைபெற்ற மாநில மாநாட்டில்  வேலை ஸ்தாபன அறிக்கையை பொதுச்செய லாளர் ஆ.செல்வமும், வரவு செலவு அறிக்கை யை மு.பாஸ்கரனும் சமர்ப்பித்தனர்.  பின்னர் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பொதுச் செயலாளர் ஆ.செல்வம் தொகுப்புரை வழங்கினார்.

வாழ்த்துரை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க த்தின் மாநிலத் தலைவர் கு.குமரேசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ச.பாரி, தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ரெ.காயாம்பூ, தமிழ்நாடு வணிகவரி பணி யாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தே.முருகன், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.செந்தில்குமார், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.நூர்ஜஹான் மற்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், இரா.தாஸ், கு.வெங்கடேசன், பேராசிரியர்  காந்திராஜ், கு.தியாகராஜன், ஆர்.பெருமாள்சாமி ஆகியோர் மாநாட்டில் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் பேசினார்.

முதல்வர் பங்கேற்பு

19ஆம் தேதி மாலை நடைபெற்ற பொது  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் ஆகி யோரும் பேசினர். மாநில பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை விளக்கிப் பேசினார். முன்னதாக வரவேற்புக்குழு செயலாளர் சா.டானியல் ஜெயசிங் வரவேற்றார். மாநிலச்  செயலாளர் இரா.நம்பிராஜன் நன்றி கூறினார். மாற்று ஊடக மையத்தின் தப்பாட்ட கலை  நிகழ்ச்சிகளும், நாகை அரசு ஊழியர் கலைக் குழு சார்பில் எதார்த்த நாடகங்களும், சென்னை மாதவரம் புலித்தேவன் சிலம்பாட் டக் குழுவினரின் சிலம்பாட்டமும் அனை வரையும் வெகுவாக கவர்ந்தன.

நிர்வாகிகள் தேர்வு

மாநிலத் தலைவராக மு.அன்பரசு, துணைத் தலைவர்களாக மொ.ஞானத்தம்பி, ஏ.பெரியசாமி, சி.எஸ்.கிறிஸ்டோபர், கோ. பழனியம்மாள், சி.பரமேஸ்வரி, மு.செல்வ ராணி ஆகியோரும், பொதுச் செயலாளராக  ஆ.செல்வம், துணைப் பொதுச் செயலாள ராக இரா.மங்கள பாண்டியன், என்.வெங்கடே சன், மு.சீனிவாசன், தெ.வாசுகி ஆகியோ ரும், மாநிலச் செயலாளர்களாக சா.டானியல் ஜெயசிங், உ.சுமதி, ச.ஹேமலதா, அண்ணா. குபேரன், ஆ.அம்சராஜ். எஸ்.கோதண்ட பாணி ஆகியோரும் பொருளாளராக மு.பாஸ்கரன், தணிக்கையாளர்களாக முபாரக் அலி, கு.மகாலிங்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.