தாமரை தண்ணீரோடு ஒட்டாது; தமிழ்நாடு பாஜகவை ஏற்காது
திமுகவும் முதன்மை எதிரி தானாம்... மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு
மதுரை, ஆக. 21 - “தாமரை இலை மீது தண்ணீர் கூட ஒட்டாது; பின்னர் தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒட்டு வார்கள்” என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார். தவெக-வின் 2-ஆவது மாநில மாநாடு, மதுரை அருகே பாரபத்தியில் வியா ழக்கிழமையன்று நடை பெற்றது. இந்த மாநாட்டில் உரை யாற்றுகையில் இந்த கேள்வி யை எழுப்பிய விஜய், கீழ டியில் அகழாய்வு செய்து எடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் தமிழ் மக்களின் வர லாறு நீண்ட நெடிய பாரம் பரியம் கொண்டது என்பது தெரியவந்துள்ள சூழலில் அதை அங்கீகரிக்க மறுக் கும் ஒன்றிய பாஜக அர சுக்கு விஜய் கண்டனம் தெரிவித்தார். நீட் தேர்வு கொடுமை யால் எண்ணற்ற மாணவர்கள் பலி யாகிவரும் நிலை யில் நீட்தேர்வை, ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரத மராக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி தமிழக மீனவர்களின் பிரச்சனை களை தீர்ப்பதற்காக கச்சத் தீவை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார். திமுக பாஜ கவுடன் மறைமுக கூட்டணி யில் உள்ளது என்றும், அதிமுக பாஜகவுடன் நேரடி கூட்டணியில் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.