tamilnadu

img

இடங்கணசாலை பகுதியில் உள்ளாட்சி தலைவர்கள் தேர்வு

இளம்பிள்ளை, மார்ச் 5- இடங்கணசாலை நகராட்சி மற்றும் இளம்பிள்ளை பேரூ ராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். இளம்பிள்ளை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 11 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும்,  பாமக, சுயேச்சை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. இந் நிலையில், வெள்ளியன்று தலைவர், துணைத் தலைவருக் கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த 7 ஆவது வார்டு உறுப்பினர்  நந்தினி மற்றும் திமுகவைச் சேர்ந்த 5 ஆவது வார்டு உறுப் பினர் துரை ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த னர். இதில், நந்தினி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 12 ஆவது வார்டு உறுப்பினர் ராஜமாணிக்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இடங்கணசாலை நகராட்சி

இடங்கணசாலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் முறையாக நகர மன்றத் தேர்தல் நடைபெற்றது.  இதில் 27 வார்டுகளில் திமுக 15 இடங்களையும், பாமக 8 இடங் களையும், அதிமுக, சுயேட்சை தலா 2 இடங்களையும் வென் றன. இதையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், திமுக  சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாள ரும், இடங்கணசாலை நகராட்சி 12 ஆவது வார்டு உறுப்பின ருமான கமலக்கண்ணன் போட்டியின்றி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். நகராட்சி துணைத் தலைவராக 7 ஆவது வார்டு உறுப்பினர் தளபதி தேர்வு செய்யப்பட்டார்.