தொழிலாளி தற்கொலை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
ஈரோடு, ஆக.24- பெருந்துறை அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த தொழி லாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெரிய மடத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (35). இவ ரது மனைவி யோகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாலசுப்பிரமணி யன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலை யில், அந்நிறுவனத்தின் கடுமையான வேலைப்பளு காரண மாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல இயலாததால், தனக்கு சேர வேண்டிய ஒரு மாத சம்பள நிலுவைத்தொகை கேட்டுள்ளார். ஆனால், அந்நிறுவனத்தினர் 3 மாதங்களாகியும் சம்ப ளத்தை வழங்காமல் அலைக்கழித்து வந்தனர். அதனால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணி, கம்பெனி உரிமையாளர் தான் தனது இறப்புக்கு காரணம் என்று வீடியோ பதிவு செய்து வைத்து விட்டு வியாழனன்று மாலை தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் (பிஓஏ) எஸ்சி எஸ்டி வழக்கும், தற்கொலைக்கு தூண்டியதற்கும் உட்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டு மென அவரது மனைவி காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியிருந்தார். யோகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் களத்தில் இருந்தனர். இரண்டு நாள் காத்திருப்பையடுத்து சனியன்று மாலை பட்டி யலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி முதல் தகவல் அறிக்கை திருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.