tamilnadu

img

பெண்களுக்கு எதிரான போதை - வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்கப் போராடுவோம்

பெண்களுக்கு எதிரான போதை - வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்கப் போராடுவோம்

மாதர் சங்க மாநில மாநாடு அறைகூவல்;  அக்.14 ஆர்ப்பாட்டம்

குழித்துறை, செப். 27 - பெண்களுக்கு எதிரான போதை - வன்முறையற்ற தமிழ கத்தை வலியுறுத்தியும், நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்கக் கோரியும் அக்டோபர் 14 அன்று அனைத்து மாவட்டங் களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது மாநில  மாநாடு, குழித்துறையில் செப்டம்பர் 24 துவங்கி 27 வரை நடைபெற் றது. இந்த மாநாட்டின் நிறை விலேயே, 2019-இல் துவங்கப் பட்ட போதைக்கு எதிரான இயக்கத் தை மேலும் வலுவாக முன்னெடுப் பதுடன் வன்முறையற்ற தமிழ கத்தை உருவாக்கும் நோக்கத்து டன் தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புறங்களிலும் அக்டோபர் 14  அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்த மாநாடு அறைகூவல்விடுத்துள்ளது. நூறுநாள் வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் கிராமப்புறங்களில் மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த வேண்டும்; நகர்ப்புறங்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது. முன்னதாக, பொதுச் செய லாளர் அ.ராதிகா, பொருளாளர் ஜி. பிரமிளா ஆகியோர் முன்மொழிந்த அறிக்கைகள் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாநாட்டு விவாதங்களின் ஒரு பகுதியாக, குழு விவாதங்கள் நடைபெற்றன. இதில் தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளர் மீதான தாக்கம், பெண் தொழிலாளர்கள் நிலை  என்னும் தலைப்பிலான விவாதக் குழுவுக்கு உ. வாசுகி, எஸ். பவித்ரா  தேவி ஆகியோர் தலைமை வகித்தனர்.  பெண்கள் பிரச்சனைகளில் விரிவான விவாதம் ‘நகர்ப்புற விரிவாக்கமும் பெண்கள் சந்திக்கும் சவால்களும்’ என்கிற தலைப்பில் பி. சுகந்தி, எஸ்.  பாக்கியம் தலைமையில் விவாதம் நடைபெற்றது. ‘குழந்தைகள் மீதான வன்முறையும் அரசின் கட மையும்’ என்கிற தலைப்பில் எஸ். வாலண்டினா, எஸ். தமிழ்ச்செல்வி தலைமையிலும் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுப்போம்’ என்ற தலைப்பில் அ. ராதிகா, எஸ்.லட்சுமி ஆகியோர் தலைமை யிலும், ‘பாலினச் சிறுபான்மை யினர் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் எஸ்.கே. பொன்னுத்  தாய், இ. மோகனா தலைமை ிலும், போதைக் கலாச்சாரமும் சமூக சீர்கேடுகளும் என்கிற தலைப்பில் ஜி. பிரமிளா, பி. பூமயில் தலைமை யிலும் குழு விவாதங்கள் நடை பெற்றன. மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பேசினார்.

மாநில நிர்வாகிகளாக ஜி. பிரமிளா,  அ. ராதிகா, ஜி. ராணி தேர்வு!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாட்டின் நிறைவாக 85 உறுப்பினர்கள் கொண்ட  புதிய மாநிலக்குழுவும், 25 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.  மாநிலத் தலைவராக ஜி.பிரமிளா, மாநிலப் பொதுச்செயலாளராக அ. ராதிகா, பொருளாளராக ஜி. ராணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  மாநிலச் செயலாளர்களாக எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். லட்சுமி, ஆர்.சசிகலா, மாநிலத் துணைத் தலைவர்களாக  எஸ்.வாலண்டினா, பி.சுகந்தி, உ.வாசுகி, கே.பாலபாரதி, எஸ்.தமிழ்ச்செல்வி, என். உஷா, துணைச் செயலாளர்களாக பி. கற்பகம்,  எஸ்.பாக்கியம், என்.சித்ரகலா, பி.பூமயில், டி.லதா,  எஸ்.பவித்ரா,  வி.மேரி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களாக உ.நிர்மலா  ராணி, பி.சுசீலா, ஜெ.உஷா, ஆர்.கலைச்செல்வி, பி. பத்மா,  ஆர்.மல்லிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.