tamilnadu

img

பொருளாதாரச் சுரண்டலையும் மனுவாத அரசியலையும் முறியடிக்க உறுதியேற்போம்! சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் சிபிஎம் அழைப்பு

பொருளாதாரச் சுரண்டலையும் மனுவாத அரசியலையும் முறியடிக்க உறுதியேற்போம்! சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் சிபிஎம் அழைப்பு

சென்னை, மார்ச் 7- “பெண்கள் மீதான பொருளாதாரச் சுரண்ட லுக்கும், சமூக ஒடுக்கு முறைக்கும் எதிராக ஒன்றுபட்ட மக்கள் இயக் கத்தை கட்டியெழுப்ப சர்வதேச பெண்கள் தினத்தில் உறுதி ஏற்போம்!” என்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச மகளிர்  தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் விடுத்துள்ள, அந்த வாழ்த்துச் செய்தி வருமாறு: ரத்தமும், வியர்வையும்   கலந்த வீர வரலாறு நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர் கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்து வமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உல களாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வர லாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச  பெண்கள் தினமாகும். தொழிற்சாலைகளில் மோசமான பணிச்சூழலில் உயிரிழந்த பெண் தொழி லாளர்களுக்கான விடியலில் துவங்கி சம  ஊதியம், வேலைநேர வரம்பு, வாக்கு ரிமை, சமூக மரியாதை ஆகியவற்றுக்கா கப் போராடிய பெண்கள் இயக்கங்களின் ரத்தமும், வியர்வையும் கலந்த வீர வர லாறே மகளிர் தினம். தீரமிக்க போராட்ட  மரபைக் கொண்டாடுவோம் இத்தகைய தீரமிக்க போராட்ட மரபை  அடிப்படையாகக் கொண்டு, உலகம் முழு வதும் ‘மார்ச் 8’ அன்று பெண்கள் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. உழைப்புச் சுரண்டல், சமூக அநீதி ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தை இந்தியாவிலும், உலகெங்கிலும் நடத்தி வருகிற அனை த்து ஜனநாயக முற்போக்கு பெண்கள் அமைப்புகளுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்  கிறோம். வளங்களை சூறையாடும் நோக்கோடு  நாடுகளின் மீது அடுத்தடுத்து போர்  தொடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் செயல் உலகம் முழுவதும்  பதற்  றத்தை உருவாக்கியுள்ளது. போர் நடை பெறும் நாடுகளில் எல்லாம் பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எனவே, பெண் விடு தலைக்காக குரல் எழுப்பும் சர்வதேச மக ளிர் தினத்தில் போருக்கு எதிராகவும் நாம்  உரத்து முழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான  சவால்கள் தீவிரமடைந்துள்ளன இன்றைய இந்திய அரசியல் சூழ லில், பெண்கள் எதிர்கொள்ளும் சவால் கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. ஒன்றிய  பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கம்,  மனுவாதச் சிந்தனை, ஜனநாயக விரோத, மதவெறி அரசியல் ஆகி யவை ஒன்றிணைந்து, பெண்களின் வாழ்வாதாரங்களையும் உரிமைகளை யும் நேரடியாகத் தாக்கி வருகின்றன. வேலை வாய்ப்புகள் சுருக்கப்படுதல், பொதுத்துறை நிறுவனங்கள் தனி யார்மயமாக்கப்படுதல், தொழிலாளர் சட்டங்கள் பலவீனப்படுத்தப்படுதல் ஆகி யவை பெண்களை அதிகமாக பாதிக்கும்  கொள்கைகளாக அமல்படுத்தப்பட் டுள்ளன. அமைப்புசாரா துறைகளில் பெரும் பான்மையாக பணிபுரியும் பெண்கள், விவ சாயத் தொழிலாளர்கள், கட்டுமானம், வீட்டு வேலை, சிறு தொழில்கள், அங்கன்  வாடி, ஆஷா, சத்துணவு உள்ளிட்ட திட்டப்  பணியாளர்கள், குறைந்த ஊதியம், நிரந்த ரமற்ற வேலை, சமூக பாதுகாப்பு இல் லாமை போன்ற கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளனர். விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை பெண்களின் தினசரி வாழ்க்கையை  மேலும் கடினமாக்கியுள்ளது. சுற்றுச் சூழல்  பிரச்சனைகள் கூட பெண்கள் மீது அதி கமான பாதிப்புகளை உருவாக்குவதோடு, குடும்ப வன்முறைகள் அதிகரிப்புக்கும் வழி வகுப்பதாக ஆய்வுகள் தெரி விக்கின்றன. பொருளாதாரச் சுரண்டல்  மனுவாத அரசியலை வீழ்த்துவோம் ஒருபுறம் பொருளாதாரச் சுரண்டல் தீவிரமடைந்து வரும் நிலையில், மறு புறம் பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்  படுத்தும் மனுவாத அரசியல், சமூகத்தில்  பெண்களை இரண்டாம் நிலை குடிமக்க ளாக நீடிக்க வைக்கும் முயற்சிகளை தீவி ரப்படுத்தி வருகிறது. பெண்களின் உடை,  கல்வி, வேலை, கருத்துச் சுதந்திரம் ஆகி யவை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. பெண்களுக்கு எதிரான பல வித வன்முறைகள், பாலியல் குற்றங்கள்  அதிகரித்து வரும்போதும், குற்றவாளி களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப் படும் சூழல் ஜனநாயகத்திற்கு பெரும்  அச்சுறுத்தலாக உள்ளது. நீதிமன்றங்க ளும் பெண்கள் மீதான வன்முறைகளை மனுவாத சிந்தனையுடன் அணுகி அளிக் கும் தீர்ப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தச் சூழலில், மார்ச் 8 என்பது பெண்  கள் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்  டங்களை மேலும் வலுப்படுத்த உறுதி எடுக்க வேண்டிய நாளாகும். பெண்கள் விடுதலையன்றி  சமூக விடுதலை இல்லை பிற்போக்கு மற்றும் பழமைவாத கருத்துக்களை உயர்த்திப் பிடிக்கும்  இந்துத்துவா வகுப்புவாத சக்திகளை யும், அதனோடு கூட்டுச் சேர்ந்து நிற்கும்  அனைத்து அரசியல் சக்திகளையும் எதிர்  வரும் தேர்தல் களத்தில் தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது. பெண்கள் விடுதலை இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை. பெண்  களின் உரிமைகள், சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை காக்கும்  போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். பெண்கள் மீதான பொருளாதாரச் சுரண்ட லுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக  ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை கட்டி யெழுப்ப சர்வதேச பெண்கள் தினத்தில் உறுதி ஏற்போம். இவ்வாறு வாழ்த்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.