tamilnadu

img

பிலடெலி (PHILATELY) என்றால் என்ன ?

‘தபால்தலை’ (POSTAGE STAMPS) சேகரிப்புக்குத்தான்- ‘பிலடெலி’ என்று பெயர். (முதன் முதலில் ஸ்டாம்ப் வெளியிட்ட நாடு பிரிட்டன். 1840-இல் அரசி விக்டோரியா வின் படத்துடன் வெளியானது. 7 வருடம் கழித்துதான் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.). இதனை சேகரிப்போர் பிலடெஸ்ட் PHILATEST என்று அழைக்கப் பட்டனர். PHICS விருப்பம், ATELEIA வரி ரசீது என்று பொருள். 14-ஆம் நூற்றாண்டிலேயே தபால் நடமுறை பழைய பாபிலோனியப் பேரரசில் இருந்துள்ளது. பின்பு ‘ஸ்டாம்ப்’ வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் ‘பிலிடெலி’ கலை  தொடங்கியது. தபால் தலையில் நாட்டின் பெயர் அச்சிடாமல் இருந்தால்  அது இங்கிலாந்து என்று பொருள்!. பூடான், தாய்லாந்து 3 டி தபால்தலை வெளியிட்டு அந்நியச் செலவாணியைப் பெருக்குகின்றன. சில நாடுகளில் பாதியாக வெட்டி உபயோகப்படுத்தும் வகையிலும்  வெளியிடப்படுகிறது. இதற்கு பைசெக்ட்-ஸ்டாம்ப் BISECT-STAMP என்று பெயர். சென்னையில் தலைமை தபால் அலுவலகத்தில் (PMG OFFICE-இல்) ஆண்டுதோறும் தபால்துறை –‘பிலிடெலி கண்காட்சி’ நடத்துகிறது. (அதுபோலவே இங்கு இந்தியாவில் ஒரே பெயருள்ள பல ஊர்கள் அதே மாவட்டத்திலும் மேலும் பல மாவட்டங்களில் இருப்பதால் – பட்டுவாடாவை துரிதப்படுத்தவே (QUICK DELIVERY) இந்த பின் PIN கோடு {அஞ்சல் குறியீட்டு எண்} கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை நாம் தான் சரியாக பின்பற்றுவதில்லை