tamilnadu

img

கரூர் துயரம் தொடர்பாக நீதி விசாரணை விரைவாக நடக்கட்டும்! குற்றமிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்!

கரூர் துயரம் தொடர்பாக நீதி விசாரணை விரைவாக நடக்கட்டும் குற்றமிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய எம்.ஏ. பேபி

கரூர், அக். 3 –  கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டத் தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 அப்பாவி உயிர்கள் பலியான சோகத்தை தொட ர்ந்து, “நீதி விசாரணை விரைவாக நடக்கட்டும்; குற்றமிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி  வலியுறுத்தினார். பேபி தலைமையிலான ஆறு பேர்  கொண்ட குழுவினர் அக்.3 வெள்ளி யன்று கரூர் வந்து, கண்ணீரில் மிதக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங் களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னர். குழந்தைகள் உட்பட பலரின் உயிர்களை காவு கொண்ட சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களையும் சந் தித்தார். பின்னர் செய்தியாளர்களி டம் விரிவாகப் பேசிய அவர், இந்த பயங்கர சோகத்திற்கு பொறுப்பான வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று  கூறினார்.

தாயை இழந்த மகனின் எதிர்காலம் பற்றி கவலை

எம்.ஏ.பேபி தலைமையிலான குழு வில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக் குழு உறுப்பினரும் மக்களவைக் குழு தலைவருமான கே.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினரும் கட்சி யின் கேரள மாநிலக்குழு உறுப்பின ருமான டாக்டர் வி.சிவதாசன், கட்சியின் தமிழ்நாடு சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் ஆகியோர் இடம்பெற்றனர்.  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயலாளர் மா.ஜோதி பாசு, கரூர் மாநகர செயலாளர் எம். தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், பி. ராஜூ, கே.சக்திவேல், சி.முருகேசன், இரா.முத்துச்செல்வன், பி.ராம மூர்த்தி, சி.ஆர்.ராஜாமுகமது உள்ளிட் டோரும் குழுவுடன் இருந்தனர். வேலுச்சாமிபுரம் ஏமூர் புதூரில் உயிரிழந்த சந்திராவின் வீட்டிற்கு சென்ற குழுவினர், அவரது மகன் சக்தி வேலை சந்தித்தபோது, அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதை அறிந்து மனம் பதைத்தனர். உடனடி யாக பேபி அவரிடம் அன்புடன் பேசி னார். “உன் அம்மா இந்த துயரத்தில் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர்  நினைவாக, நீ உன் படிப்பை மீண்டும் தொடர வேண்டும்,” என்று சக்தி வேலை அன்பாக வற்புறுத்தினார்.  சோகத்தில் மூழ்கியிருந்த அந்த சிறுவன் முதலில் தயங்கினார். ஆனால் குழுவினர் அனைவரும் சேர்ந்து அவ ருக்கு ஊக்கமளித்தனர். இறுதியாக சக்திவேல் தனது படிப்பைத் தொடர ஒப்புக்கொண்டார். கட்சியின் உள்ளூர் குழு அவருக்கு தேவையான அனை த்து உதவிகளையும் செய்யவும், அவரது கல்வி முன்னேற்றத்தை கண்காணிக்கவும் பொறுப்பேற்றுள் ளது. ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்து அவரது கல்வி முன்னேற்றத்தை நேரில் பார்ப்பதாக பேபி உறுதியளித் தார். “இந்த சோக சூழ்நிலையில் இது ஒரு நல்ல செய்தி” என்று பேபி கூறி னார். அதேபோல் உயிரிழந்த குழந்தை  பரதீக்கின் தாயார் ஷர்மிளாவும் கல்லூ ரிப் படிப்பை பாதியில் நிறுத்தியிருப் பதை அறிந்த குழுவினர், அவரும் படிப்பை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பல குடும்பங்களின் கண்ணீரில்...  

நெரிசலில் உயிரிழந்த இந்திரா நகரில் வசித்த இரண்டு வயது குழந்தை துரு விஷ்ணு வீட்டிற்கும் குழுவினர் சென்றனர். குழந்தையின் பெற்றோர் துயரத்தில் தத்தளித்தனர்.  மேலும், அருக்காணி மற்றும் சக்தி வேலின் மனைவி பிரியதர்ஷினி மற்றும் மகள் தர்னிகா, சுங்ககேட் சிவ சக்தி நகரைச் சேர்ந்த அனந்த ஜோதி மற்றும் அவரது மனைவி ஹேமலதா (28), மகள்கள் சாய்லக்‌ஷனா (10) மற்றும் சாய்ஜீவா (4) ஆகியோரின் குடும்பங்களையும் குழுவினர் சந்தித்து ஆறுதல் கூறினர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் படுக்கையில் கிடக்கும் ஒரு இளைஞரையும் குழு வினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னர். “விரைவில் குணமாகிவிடுவீர் கள்” என்று அவருக்கு நம்பிக்கை ஊட்டினர்.

தமிழ்நாடு அரசின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டு

இந்த துயரத்தில் யாரும் அர சியல் ஆதாயம் தேடக் கூடாது என்று  குறிப்பிட்ட  எம்.ஏ.பேபி, முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்த சோகத்தை அர சியல் ரீதியாக பயன்படுத்த முயற்சிக்க வில்லை என்றும் சுட்டிக்காட்டினார். “சம்பவம் நடந்த உடனேயே அரசு செயல்பாட்டுக்கு வந்தது. முக்கிய அமைச்சர்களை அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நேரில் மேற்பார்வை செய்தது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்தது. அதே இரவு நள்ளிரவில் முதலமைச்சர் தானே சம்பவ இடத்திற்கு வந்துநிலைமையை ஆய்வு செய்தார்,” என்று பேபி  குறிப்பிட்டார். மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் செய்த அற்புதமான பணியை  பாராட்டிய அவர், “மிகவும் பாதிக்கப்பட்ட 2 பேரைத் தவிர மற்ற எல்லோரையும் காப்பாற்ற முடிந்தது. இப்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை  பெற்று வருகிறார். மற்ற அனை வருக்கும் சரியான மருத்துவ சிகிச்சை  வழங்கப்பட்டது,” என்றார். பிரேத பரிசோதனை பணியை போர்க்கால அடிப்படையில் முடித்த தையும் பேபி பாராட்டினார். “எட்டு மணி நேரத்திற்குள் பெரும்பாலான பிரேத பரிசோதனைகள் முடிக்கப் பட்டன. இத்தகைய நிர்வாக மற்றும்  மருத்துவ நிர்வாக திறமை வேறெங்கும்  காட்டப்பட்டதாக நான் நினைக்க வில்லை,” என்று கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் அதிர்ச்சி தரும் குறைபாடுகள் அரசின் உடனடி நடவடிக்கை களை பாராட்டிய பேபி, நிகழ்ச்சி ஏற்  பாட்டாளர்களை கடுமையாக விமர் சித்தார். “நமது நாட்டின் வரலாற்றில் அரசியல் கட்சி கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் தொடர்பாக நடந்த மிகப்பெரிய உயிரிழப்பு இதுவாகும். இது ஒரு மிகப்பெரிய வேதனை,” என்று மனம் நெகிழ்ந்த குரலில் கூறினார். “அரசியல் நிகழ்ச்சியை நடத்திய  ஏற்பாட்டாளர்களிடமிருந்து போது மான கவனமும் பொறுப்புணர்வும் இல்லை,” என்று சுட்டிக்காட்டினார். தாயை இழந்த சக்திவேலிடம் பேசிய போது தெரிந்த தகவல் அதிர்ச்சிய ளிப்பதாக இருந்தது. “ ஒலி பெருக்கி மூலம் மக்களை அமைதியாக இருக்கச்  சொல்லியோ, ஒழுங்கை கடைபிடிக்கு மாறு அறிவுறுத்தியோ, ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்தோ எந்த அறி விப்பும் இல்லை என்று அவர் கூறி னார். இது மிகவும் அதிர்ச்சியானது,” என்றார் பேபி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளை எப்படி நடத்துகிறது என்பதை உதாரணமாகக் காட்டிய அவர், “நாங்கள் ஒழுங்குமுறை ஆலோ சனைகளை மட்டும் வழங்குவதில்லை. எங்கள் செந்தொண்டர்கள், அந்த கூட்  டம் ஏற்பாடு செய்துள்ள கமிட்டியின்  வழிகாட்டுதல்களை செயல்படுத்து வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும்போது ஆண்கள்  அங்கு சென்றால், அந்த இடம் பெண் களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது என்று அறிவிக்கிறோம். எங்கள் செந்  தொண்டர்கள் சென்று அதை செயல் படுத்துவார்கள். ஆனால் இங்கே அது  போன்ற எதுவும் இல்லை,” என்று வருத்தத்துடன் கூறினார். கால தாமதம் குறித்து பேசிய பேபி, “விஜய் நிகழ்ச்சி தளத்திற்கு வர ஏழு  மணி நேரம் தாமதமானார். வயதான வர்கள், குழந்தைகள் உட்பட அனை வரும் ஏழு மணி நேரம் காத்திருந்தனர்.  ஏற்பாட்டாளர்கள் குடிநீர் அல்லது சிற்றுண்டி எதுவும் வழங்கவில்லை. என்ன விளைவு ஏற்பட்டிருக்கும் என் பதை நாம் கற்பனை செய்யலாம்,” என்று கூறினார். விஜய் நடவடிக்கை குறித்த கேள்விகள் “மக்கள் தண்ணீருக்காக கதறிக் கொண்டிருந்தபோது, விஜய் சில தண்ணீர் பாட்டில்களை வீசியதாக கேள்விப்பட்டேன் - இது உண்மையா என்று எனக்குத் தெரியாது. பின்னர் திரைப்பட நட்சத்திரத்தால் வீசப்பட்ட சிறிய தண்ணீர் பாட்டில்களை பிடிக்க  முண்டியடிப்பு, பரபரப்பு மற்றும் நெரி சல் ஏற்பட்டது. சிலருக்கு விஜய் வீசிய  பாட்டிலைப் பிடிக்க வேண்டும் என்ற பெரும் ஆசை இருந்திருக்கும். இதெல்  லாம் சாத்தியம். இவற்றையெல்லாம் அவர் நினைவில் வைத்திருக்க வேண்டும்,” என்றார் பேபி. “இத்தகைய சூழ்நிலையில், எங்க ளைப் பொறுத்தவரை, ஏதோ சம்பவம்  நிகழும்போது தலைமை நிலைமை யை கட்டுப்படுத்த இடத்திற்கு விரைய  வேண்டும். இங்கே தலைவர் சம்பவ இடத்தில் இருந்தார், ஆனால் நிலை மையை கட்டுப்படுத்த முயற்சிக்கா மல், அவர் சம்பவ இடத்திலிருந்து மறைந்தார். இதிலிருந்து உங்களு டைய சொந்த முடிவுக்கு வரலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார். “டஜன் கணக்கான மக்கள் இறந்து விட்டனர். மூன்று மணி நேரம் காத்தி ருந்து அவர் ட்வீட் அல்லது எதிர்வினை  அளித்தார். அவரது வீடியோ வெளியீடு  மூன்று நாட்களுக்குப் பிறகு வந்தது. இது ஒரு அரசியல் தலைவருக்கு பொருத்தமானது அல்ல,” என்று பேபி  தெரிவித்தார். “நாம் இந்த சம்பவத்தை அரசியல்  ரீதியாக பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது. இது ஒரு சோகம். விலை மதிப்பற்ற உயிர்கள் இழக்கப்பட்டுள் ளன. எதிர்காலத்தில் இது போன்ற விஷ யங்கள் நடக்கக்கூடாது,” என்று உறுதி யுடன் வலியுறுத்தினார் பேபி. சீன பயணத்தில் இருந்து திரும்பியவுடன் வந்த பேபி சோகம் நடந்தபோது சீன மக்கள் குடியரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் பயணத்திற்கு தலை மையேற்று சென்றிருந்த பேபி, சீனா வில் இருந்தபோதே இந்த பயங்கர சோகத்தைப் பற்றி கேள்விப்பட்டார். நாடு திரும்பியவுடன் முதல் வேலை யாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க  கரூர் வந்ததாகக் கூறினார்.  முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்  கே.பாலகிருஷ்ணன்,  கட்சித் தலை வர்களுடன் சம்பவம் நடந்த உட னேயே கரூர் வந்து நிலைமையை  ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. சதி கோட்பாடு? செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பேபி, “தமி ழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளது. நீதி விசாரணை ஆணையம் அனைத்து விவரங்களையும் ஆராயப் போவ தால், இந்த நேரத்தில் நாம் தீர்ப்பு வழங்கக்கூடாது. அறிக்கையை வழங்க நீதி ஆணையம் உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இது எப்படி நடந்தது என்று முடிவுக்கு வர வேண்டும்” என்றார். சதி கோட்பாடுகள் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பேபி, “பல கோட்பாடுகள் உள்ளன. நீதி ஆணையம் இவை அனைத்தையும் விசாரிக்கப் போகிறது. விஜயின் குற்றச்சாட்டு சரியானதாக இருந்தால்,  நீதி ஆணையம் அதை சுட்டிக்காட்டும். அவர்கள் அதையும் வெளிக்கொண்டு வருவார்கள். நீதி ஆணையம் நடு நிலையான முறையில் தனது கடமை யை செய்யும். அதைத்தான் நாங்கள்  எதிர்பார்க்கிறோம்,” என்று தெளிவு படுத்தினார். நாமக்கல் தாமதம் விஜய் நாமக்கலில் கூட்டத்திற்கு செல்ல வேண்டிய உரிய நேரத்தில்  அவர் செல்லவில்லை என்ற தகவலை யும் பேபி பகிர்ந்துகொண்டார். “நாமக்  கலில் இருக்க வேண்டிய நேரத்தில், அவர் சென்னையிலிருந்து புறப்பட தொடங்கினார். இந்த தகவல்களை நீங்கள் சேகரித்து அதிலிருந்து முடிவு களுக்கு வரலாம். ஆனால் இப்போது விஷயங்கள் சட்ட அமைப்பின் அறி தலுக்குள் உள்ளன. எனவே ஒரு வரை குற்றம் சாட்டவோ அல்லது விடு விக்கவோ எந்த முடிவுக்கும் குதிக்க  வேண்டாம். நீதி விசாரணை ஆணைய  அறிக்கை வரட்டும்,” என்று குறிப் பிட்டார். “நீதி விசாரணை ஆணையம் தனது  அறிக்கையை குறிப்பிட்ட காலக்கெடு வில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது., அதிமுக அரசின்போது, ஸ்டெர்லைட் சம்பவத்தை விசாரிக்க  அவருக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட் டது. அவர் அந்த வேலையை சிறப்  பாக செய்தார்,” என்று பேபி நம்பிக்கை  தெரிவித்தார். சிபிஐ விசாரணைக்கான கோரிக்  கையை எதிர்த்த பேபி, “சிபிஐ விசா ரணையை நாங்கள் ஆதரிக்கவில்லை. நீதி ஆணையம் இப்போது பணி யாற்றி வருகிறது. காவல்துறை இயல்  பாகவே விசாரணை நடத்த நடவ டிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் ஒருங்கிணைப்பார்கள்,” என்றார். “நீதி விசாரணை குறிப்பிட்ட காலக்  கெடுவில் முடிக்கப்பட வேண்டும். இந்த பயங்கரமான சோகத்திற்கு பொறுப்பானவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும். யாரையும்  காப்பாற்றக்கூடாது. யாரையும்  தேவையில்லாமல் விடுவிக்கக் கூடாது. அவர்கள் தகுந்த தண்டனை யைப் பெற வேண்டும், இதனால் எதிர்  காலத்தில் இது போன்ற துரதிர்ஷ்ட சோகங்கள் நடக்காது,” என்று உறுதி யாக குறிப்பிட்டார் பேபி. வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் இழப்பீட்டுக்கு அப்பால், பாதிக்  கப்பட்ட குடும்பங்களுக்கு வேலை  வாய்ப்பு அவசியம் என்றும் பேபி  வலியுறுத்தினார். “அன்புக்குரிய வர்களை இழந்த குடும்பங்கள், அரசு  நடவடிக்கை எடுத்து அந்த குடும் பங்களில் உள்ள ஒருவருக்கு ஏதே னும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய  வேண்டும், இதனால் அந்த குடும் பங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் வாழ்க்கையை முன்னெ டுத்துச் செல்லவும் முடியும்,” என் றார். “எவ்வளவு பணம் கொடுத்தாலும், இழப்புக்கு ஈடு செய்ய முடியாது. உயிர் இழந்துவிட்டால், எதையும் சரி  செய்ய முடியாது. அது மாற்ற முடி யாத இழப்பு. ஒவ்வொரு பாதிக் கப்பட்ட குடும்பத்திலும் உள்ள ஒரு வருக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி திறனின் அடிப்படையில் பொருத்தமான வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும்,” என்று வலி யுறுத்தினார் பேபி. மார்க்சிஸ்ட் கட்சியின் பொறுப்புணர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் செயல்பாடுகளைப் பாராட்டிய பேபி, “எப்போது சில சோகம் நிகழ்ந்தாலும் மக்களுக்கு உதவ முன்னணியில் இருப்பதில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு  சிறந்த பாரம்பரியம் உள்ளது. தமிழ்  நாடு மாநில கட்சி, கரூர் மாவட்ட கட்சி  மற்றும் உள்ளூர் கட்சி தோழர்கள் செய்த பணிகளை நான் பாராட்டு கிறேன். இந்த துரதிர்ஷ்ட சோக சம்ப வத்தில் கட்சியால் செய்ய முடிந்த அனைத்தையும் கட்சி செய்து வரு கிறது,” என்றார்.