சிங்காரவேலரை வரும் தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்: முதலமைச்சர்
சென்னை, பிப். 18 - இந்தியாவில் முதன்முறையாக, ‘மே 1’ உழைப்பாளர் நாளை செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலை தளங்களில் சிறப்புப் பதிவு வெளியிட்டார். அதில், “தந்தை பெரியாருடன் ‘குடி அரசு’வில் இணைந்து, பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலரின் புகழை தொடர்ந்து போற்றுவோம்; இனி வரும் தலைமுறைகளுக்கும் பாடமாகச் சொல்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
