இந்தியா - பிரான்ஸ் முக்கியத் தாதுக்கள் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) துறையில் ஒத்து ழைப்பை மேம்படுத்தும் வகை யில் இந்தியாவும் பிரான்ஸும் கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளன. இதனை பிரான்ஸுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் குமார் சிங்லா உறுதி செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மாநாட்டை யொட்டி இந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மும்பையில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் இணைந்து ஒரு ‘கூட்டு மேம்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுவை’ அமைக்க முடிவு செய்துள் ளன. உலகின் மிகப்பெரிய அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான பிரான்ஸின் “தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம்” உடன் இணைந்து அடிப்படை ஆராய்ச்சி களில் ஈடுபட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
