மக்காச்சோளத்திற்கு உரிய கொள்முதல் விலை இல்லை ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் விவசாயிகள் போராட்டம்
பெரம்பலூர், பிப்.18 - தமிழ்நாட்டில் மக்காச்சோள உற்பத்தியில் முன்னணி மாவட்டங் களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டத் தில் தற்போது மக்காச்சோள அறு வடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு மக்காச்சோளத்திற்கு ஒன்றிய வேளாண் விலை நிர்ணய ஆணையம் குவிண்டால் ஒன்றுக்கு 2,400 ரூபாய் ஆதார விலையாக அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை அதிக பட்சமாக ரூ.1,600 கொடுத்து தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்ப னை கூடத்திற்கு வரும் வியாபாரி களும், சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ரூ.1,700-க்கு கீழ் மட்டுமே கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனை துறையினர் ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள், வியாபாரிகளுடனான முத்தரப்பு பேச்சு வார்த்தையிலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்க வில்லை. இதைத் தொடர்ந்து மக்காச் சோளத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,400 கொள்முதல் விலை அறிவித்து, அதை நிறைவேற்றாத ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் புதன்கிழமை அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லதுரை தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி கள் தங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு சென்றடைய வேண்டி மக்காச்சோள கதிர்களை கழுத்தில் மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்காச்சோளத்தை சாலையில் கொட்டிய பெண் விவசாயிகள் அதை சுற்றிவந்து ஒப்பாரி வைத்து, தங்கள் வேதனையை அரசுக்கு நூதன முறையில் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயி கள், உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து ள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து வரிவிலக்குடன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து ள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், தனி யார் வியாபாரிகளின் மோசடி கொள் முதலை கட்டுப்படுத்த தவறிய மாநில அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். இதனிடையே பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தடை யை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடு பட்டனர். பின்னர் அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகளி டம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த னர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழக விவ சாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜசிதம்பரம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முகமது அலி, தமிழ்நாடு விவ சாயிகள் (சிபிஎம்)மாவட்டச் செயலா ளர் ஏ.கே. ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க(சிபிஐ) மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
