இறுதிக் கட்டத்தில் திருவனந்தபுரம்-காசர்கோடு தேசிய நெடுஞ்சாலை
திருவனந்தபுரம் கேரள போக்குவரத்துத் துறையில் வளர்ச்சியை உருவாக்கி வரும் காசர் கோடு-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் மொத்த 702 கி.மீ., நீளத்தில், 590 கி.மீ. நிறை வடைந்துள்ளது. மீதமுள்ள 16 பாதைகளின் கட்டு மானப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இவற்றில், ஆறு பாதைகள் 80 சதவிகிதத்திற்கும் மேலாக அமைக்கப்பட்டுவிட்டன. இதில் இதுவரை 11 பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இத்திட்டம் நிறை வடையும் என்று தேசிய நெடுஞ் சாலை ஆணையம் அறிவித்துள் ளது. இதன் மூலம், இந்த ஆறு வழி நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பய ணிக்க முடியும். திருவனந்தபுரத்தி லிருந்து கொச்சிக்கு பயணிக்க மூன்று மணி நேரமும், காசர்கோடுக்கு ஒன்பது மணி நேரத்திலும் சென்று சேரலாம். தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டின் ஒரு பகுதியாக நிலம் கைய கப்படுத்துதலில் கேரள மாநில அரசு மட்டுமே 25 சதவிகிதம் செல விட்டுள்ளது. நாட்டிலேயே ஒரு மாநில அரசு இவ்வாறு செலவிடு வது இதுவே முதல்முறையாகும். இதற்காக, மாநில அரசு ரூ.5580.73 கோடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைத்தது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சி யின் போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்ட இத்திட்டம் பினராயி விஜயன் தலைமையி லான இடது முன்னணியின் முதல் ஆட்சிக் காலத்தின் போது மீண்டும் புத்துயிர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
