பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
அமெரிக்காவின் இறக்குமதி வரிச் சலுகைகள் பலனளிப்பதாக இருந்தாலும் இந்தியாவின் கொள்கை முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் குறைக்கக்கூடும். மேலும், இது இந்தியாவின் பிற முக்கிய நட்பு நாடுகளுடனான உறவில் சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
சீன ரோபோ நாயை, தனது சொந்தக் கண்டுபிடிப்பாக கல்ஃகோட்டியாஸ் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியது. இதனை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரே தனது எக்ஸ் தளப் பதிவில் விளம்பரப்படுத்தியிருந்தார். அந்த நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அப்பல்கலைக்கழகம் தொடர்ந்து பாஜகவின் ஆதரவு வட்டத்திற்குள்ளேயே இருக்கப் போகிறது என்பது உறுதி.
திரிணாமுல் எம்.பி. சாகேத் கோகலே
சிறப்பு தீவிர திருத்த நடைமுறையானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) அதிகாரப்பூர்வமற்ற முறையில் மற்றும் முழுமையாக வாட்ஸ்அப் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்படுகின்றன. ஒருபோதும் பொதுவெளியில் அறிவிக்கப்படாத இரகசிய விதிகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.
எழுத்தாளர் சஞ்சய் ஜா
கல்ஃகோட்டியாஸ் பல்கலைக்கழகம் விஷயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. கல்வி புறக்கணிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மிகக் குறைந்த முதலீடு, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மற்றும் பன்முகத்தன்மை மீதான தாக்குதல்களை தான்.
