states

img

தண்டனையை குறைத்து இழப்பீட்டை அதிகப்படுத்தும் போக்கு  உச்சநீதிமன்றம் கண்டனம்

தண்டனையை குறைத்து இழப்பீட்டை அதிகப்படுத்தும் போக்கு  உச்சநீதிமன்றம் கண்டனம்

கொடுங்குற்ற வழக்குகளில் தண்டனையை குறைத்து இழப்பீட்டை அதிகப்படுத்தும் போக்குக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது.  2017 இல் நடந்த கொலை முயற்சி வழக்கில் தண்டனையை 2 மாதம் என குறைத்து குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொ டர்பான மேல்முறையீட்டு வழக்கில் அத்தீர்ப்பை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.   இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கள் ராஜேஷ் பிண்டல், விஜய் பிஷ்னோய் ஆகியோர் பாதிக்கப்பட்டோ ருக்கு வழங்கப்படும்  இழப்பீடு, குற்ற வாளிகளுக்கு வழங்கும் தண்டனைக்கு ஈடாகாது. தண்டனையை குறைத்து  இழப்பீட்டை அதிகப்படுத்தும் போக்கு குற்றவாளிகள் பணம் செலுத்தி தண்ட னையில் இருந்து தப்பித்து விடலாம் என்ற தவறான செய்தியை சமூகத்துக்கு கொண்டு செல்லும் .   குற்றத்தின் தீவிரத்துக்கு இணை யான தண்டனையை வழங்கப்படுவதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற தண்டனை போதுமானதாக இருக்க வேண்டும். மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் என கூறினர்.