‘சோசலிசமே தீர்வு’ நூல் : எம்.ஏ. பேபி வெளியிட்டார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, மதுரையில் கடந்தாண்டு நடைபெற்றது. இம்மாநாட்டையொட்டி நடைபெற்ற சிறப்பு கருத்தரங்குகளில் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் ‘சோசலிசமே தீர்வு’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. நர்மதா தேவி, வி.விஜயலட்சுமி ஆகியோர் தொகுத்த இந்த நூலை நாமக்கல்லில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட மாநிலக்குழு உறுப்பினர் அ. ராதிகா பெற்றுக்கொண்டார். உடன் கட்சியின் மாநிலக்குழு செயலாளர் பெ. சண்முகம், செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் ஆகியோர் உள்ளனர்.
