பழைய ஓய்வூதிய திட்டத்தை அடைந்தே தீருவோம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அடைந்தே தீருவோம் என்று ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் சூளு ரைத்தனர். பழைய ஓய்வூதிய திட்டம், சரண் டர் விடுப்பு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பிப்.25 ஆம் தேதி மறியல் போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். இந்த நிலையில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக் கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு 4 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்தக் குழு பிப்.24 அன்று சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ தலைவர்களுடன் அமைச்சர் கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. இதனிடையே மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், ஜாக்டோ-ஜியோ மறியல் போராட் டத்திற்கு தடை கேட்டு பொதுநல வழக்கை தொடுக்கப்பட்டது, அதனை விசாரித்த நீதிமன்றம் வேலை நிறுத்தம் செய்ய தடை விதித்தது. எனவே, மறியலுக்கு பதிலாக தற்செயல் விடுப்பு மற்றும் மாவட் டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னை எழிலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் கு.
வெங்கடேசன் பேசு கையில், “அரசு ஊழியர்கள் ஆசிரி யர்களுக்கான கோரிக்கைகளை ஒரு விழுக்காடு கூட அரசு நிறை வேற்றவில்லை. “ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் தமிழக அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடை யாது. அதனை ஆய்வு செய்ய எதற் காக ஆய்வுக்குழு? “நடைமுறை பொருத்தத்தக்க ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஆய்வு செய்ய” என்ற பெயரில் அமைக்கப் பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண் டும்” என்று அவர் வலியுறுத்தினார். “4 ஆம் நிலை பணியிடங்களை நிரப்பாமல், அவுட்சோர்சிங் மூலம் எடுக்கின்றனர். இட ஒதுக்கீட்டிற்கு, சமூகநீதிக்கு எதிராக அரசு செயல் படுகிறது. உரிமைகளை நசுக்கும் போது அரசியல் அமைப்புச் சட்டம் அளித்த உரிமையை பயன்படுத்து வோம். அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களை போராட்ட களத்திற்கு அரசு தள்ளியுள்ளது. முதலமைச்சர்தான் இதில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.