விடுதிக்குள் நுழைந்த சிறுத்தை
உதகை, ஆக.14- நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்க ளாக அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்க ளில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன. இந்நிலையில், உதகையில் உள்ள பழைய பூங்கா சாலையில் உள்ள தங்கும் விடுதிக்குள் நுழைந்த சிறுத்தை சிறிது நேரம் வளாகத்திற்குள் இறையைத் தேடி சுற்றி திரிந்துள்ளது. இது விடுதியில் பொருந்தப்பட்ட சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை உடல் மீட்பு
மே.பாளையம், ஆக.14- கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் அரசு மருத்து வமனைக்கு எதிரே உள்ள சாலையிலுள்ள புதரில் பெண் குழந்தையின் சடலம் இருப் பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத் திற்கு சென்ற மேட்டுப்பாளை யம் போலீசார் அங்கு பிறந்து சில நாட்களே ஆன, தொப் புள் கொடி கூட இன்னும் அறுக்கப்படாத பெண் குழந் தையின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து குழந்தையின் சடலத்தை மீட்டு மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.