உடுமலை மாரிமுத்து குடும்பத்திற்கு தலைவர்கள் ஆறுதல்
உடுமலைப்பேட்டையில், வனத்துறையினரின் காவலில் உயிரிழந்த பழங்குடி வகுப்பைச் சேர்ந்த முதியவர் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக மாரிமுத்துவின் மனைவி பாண்டீஸ்வரி, மகள்கள் சிந்து, ராதிகா ஆகியோர் உடுமலை ‘ஸ்டாலின்’ நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் நடந்த விபரங்களை தலைவர்கள் கேட்டறிந்தனர்.