பாதையில் மண்சரிவு குன்னூர் மலை ரயில் சேவை ரத்து!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன் னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் இடி யுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலை களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கனமழை காரணமாக கெத்தை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - மஞ்சூர் இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. குன்னூர் - கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்டுப்பா ளையம் - குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
