குன்னூரில் மண்சரிவு; மின்சாரம் தாக்கி கரடி உயிரிழப்பு
உதகை, அக்.15- கனமழையின் காரணமாக குன்னூ ரில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதக மான சூழல் நிலவும் நிலையில், செவ்வா யன்று, இரவு முழுவதும் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட் டித் தீர்த்தது. தீவிர மழையால், குன் னூர் – உதகை சாலையில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. மேலும், கேஎன்ஆர் பகுதியில் பாறை விழுந்து ஒரு பேருந்து சேதமடைந்தது. பேருந் தில் இருந்த பயணிகள் உடனடியாக மாற்று வாகனம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். உழவர் சந்தை அருகில் உள்ள பவானியம்மன் கோவில் குடியிருப்பு பகுதியிலும் வெள் ளம் சூழ்ந்ததால், நகராட்சி ஆணையா ளர் மற்றும் துணைத்தலைவர் தலை மையில் நகராட்சி ஊழியர்கள் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடு பட்டனர். இதேபோன்று, கோத்தகிரி அர வேனு பகுதியில் அல்லமனை கிராமத் தில் அறுந்து விழுந்த மின்கம்பியை எதிர்பாராமல் புதனன்று அதிகாலை அப்பகுதி வழியாக வந்த கரடி ஒன்று மிதித்தது. இதில், மின்சாரம் தாக்கி, சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மின் இணைப்பை துண்டித்தனர். கரடியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக் காக முதுமலையிலிருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். இச் சம்பவம் குறித்து கோத்தகிரி வனத்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
