சென்னை, மார்ச் 25- 45 ஆயிரம் ஏக்கரில் நில வங்கி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி தொகுதி உறுப்பி னர் டி.ராமச்சந்திரன் பேசும் போது, ‘‘ஓசூரில் 4-வது சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்களை விட்டுவிட்டு தரிசு நிலத்தை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு உகந்த பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. தொழில் பூங்காவுக்காக நிலம் எடுக்கும் போது, விவசாயிகளிடம் இருந்துபறிக்கப்படுவது இல்லை. முதல்வர் அறிவு றுத்தலின்படி, நில உரிமை யாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் விருப்பப்படி எடுத்து வருகிறோம். தமிழ கத்தின் தொழில் வளர்ச்சியை யும் கருத்தில் கொள்ள வேண்டும்”என்றார்.