tamilnadu

img

பாபநாசம் அருகே குறுவை சாகுபடிப் பணி

பாபநாசம் அருகே குறுவை சாகுபடிப் பணி

பாபநாசம், ஜூலை 28-  தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். பாபநாசம் அருகே, சாலியமங்கலம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குறுவை சாகுபடிப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவைச்  சாகுபடி மேற்கொள்ளும் வகையில் தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லணை யில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் பட்டதை அடுத்து, விவசாயப் பணி தீவிரம் அடைந்தது. முன்கூட்டியே, நாற்று விடப்பட்ட வயல்களில், நடவுப்  பணி நடந்தது. நாற்று பறித்தல், நடவு பணியில் விவ சாயத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், நடவுப் பணி நிறை வுறும் தருவாயில் உள்ளது. மேலும், நடவுப் பணியில் வட  மாநிலத் தொழிலாளர்களும் ஈடு பட்டுள்ள நிலையில், களைப்பு தெரியா மல் இருப்பதற்காக, சில இடங்களில் பெண் தொழிலாளர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடியபடி பணியை மேற்கொண்டனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு சாகுபடி பரப்பு  அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.