tamilnadu

img

கோபி: மக்களின் மருத்துவர் எம்.ராஜேந்திரன் நினைவகம் திறப்பு

நிகழ்ச்சிக்கு முதல்நாள் டாக்டர் எம்.ராஜேந்திரன் குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்தார். பின்னர் மருத்துவர்  எம்.ராஜேந்திரன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அவரது துணைவியார் மருத்துவர் எம்.ராஜலட்சுமிக்கு புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின்போது மாநிலக்குழு உறுப்பினர் பி.டெல்லி பாபு, மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தாலுக்கா செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஈரோடு, மே 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா கமிட்டியின் மேம்படுத்தப்பட்ட கட்சி அலுவலகமான மருத்துவர் எம்.ராஜேந்திரன் நினைவகம் திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது.  நிகழ்விற்கு வழக்கறிஞர் வி.சி.நந்தகுமார் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் எஸ்.யுவராஜ் வரவேற்றார். பி.கெ.கெம்புராஜ், வி.ஆர்.மாணிக்கம், டாக்டர் ஆர்.சதீஷ், ஆர்.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மருத்துவர் எம்.ராஜேந்திரனின் துணைவியார் மருத்துவர் ஜெ.பி.ராஜலட்சுமி, மேம்படுத்தப்பட்ட கட்சி அலுவலகமான எம்.ராஜேந்திரன் நினைவகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மருத்துவர் எம்.ராஜேந்திரன் உருவப் படத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி திறந்து வைத்து உரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில்,  மக்களுக்கான மருத்துவராக டாக்டர் ராஜேந்திரன் வாழ்ந்து மறைந்துள்ளார்.

அவர் தனது உழைப்பால் வாங்கிய முதல் சொத்தான இந்த இடத்தை மார்க்சிஸ்ட் கட்சிக்கு வழங்கியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் உண்மையில் மக்களின் காவல் நிலையங்கள். அப்படியொரு மக்கள் காவல் நிலையமாக இந்த அலுவலகம் நீடித்து செயல்படும் என்று தெரிவித்தார். பின்னர், மருத்துவர் எம்.ராஜேந்திரன் நினைவரங்க நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினர் வழங்கினர்.  நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், கோபி நகர் மன்ற தலைவர் நாகராஜ், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.முனுசாமி, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், விஜயராகவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சி.பிரகாசம், கே.சி.ரங்கசாமி, முருகேசன் மற்றும் சக மருத்துவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் டாக்டர் எம்.ராஜேந்திரன் நினைவு மலர் வெளியிடப்பட்டது.

;