tamilnadu

img

மாணவர் சேர்க்கையில் கொன்றைக்காடு அரசுப் பள்ளி சாதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராட்டு

மாணவர் சேர்க்கையில் கொன்றைக்காடு அரசுப் பள்ளி சாதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராட்டு

தஞ்சாவூர், அக். 13-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில், 2024-25 ஆம் கல்வியாண்டை விட 2025-26 ஆம் கல்வியாண்டில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளமைக்காக பள்ளிக் கல்வித்துறை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.  கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி, கடந்த பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் நல்ல கட்டமைப்புடன், ஒழுக்கத்துடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பேராவூரணி பகுதியில் உள்ள பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, தூரம் அதிகம் என்றாலும் கொன்றைக்காடு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதால், சென்னை நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கொன்றைக்காடு தலைமை ஆசிரியர் குமரேசனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.