tamilnadu

img

பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு கேரள முதல்வர் பாராட்டு

பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு கேரள முதல்வர் பாராட்டு

திருவனந்தபுரம், அக். 5-       நாட்டின் மிக உயரிய திரைப்பட விருதான தாதாசாகேப் பால்கே விருதை  வென்ற மலையாளத்தின் சிறந்த நடிகர் மோகன்லாலை கேரளா அரசு கவுரவித்தது. மலையாள திரை உல கத்தின் பெருமையை உலகளவில் உயர்த்திய மோகன்லாலை, முத லமைச்சர் பினராயி விஜயன் மாநில அரசின் சார்பாக பாராட்டி சிறப்பித்தார். கவிஞர் பிரபவவர்மா எழுதிய பாராட்டு சான்றிதழையும் அவர் வழங்கினார்.   அப்போது அவர்  பேசுகையில், மோகன்லால் ஒரு புகழ்பெற்ற மலை யாள திரை நட்சத்திரம் என்றும், அவர்  கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால மாக மலையாளிகளைப் பெருமைப் படுத்தியுள்ளார் என்றும் கூறினார். அவர் இன்னும் பெரிய உயரங்களை  அடைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.  இந்த விழாவிற்கு அமைச்சர் வி. சிவன்குட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சஜி செரியன், ஜி.ஆர். அனில், கே.என். பாலகோபால்,  ஏ.ஏ. ரஹீம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எம்.வி. கோவிந்தன், ஆண்டனி ராஜு,  மேயர் ஆர்யா ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர்கள் அடூர் கோபால கிருஷ்ணன், ஜோஷி, திரைக்கலைஞர் கள் அம்பிகா, ரஞ்சினி, மாளவிகா மோகன், ஷோபனா, லட்சுமி கோபால் சாமி, மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் கே. மது, மாநில திரைப்படத் தொழிலாளர் நல நிதி வாரியத் தலைவர் கே. மதுபால், திரைப்பட அகாடமி தலைவர் பிரேம் குமார், டி.கே. ராஜீவ் குமார் மற்றும் அரசியல், கலாச்சார மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.