tamilnadu

img

ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு கேரளத்தின் மாற்று

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி

நெருக்கடியின் ஆழத்தில் இருந்து கேரளா மீளத் தொடங்கியுள்ளது என்றும்,  விலை உயர்வை கட்டுப்படுத்த - உணவுப் பாதுகாப்பிற்காக என இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றும் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் அறிவித்தார். இது ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக, கேரளத்தின் மாதிரி முன்வைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். கேரள அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் வெள்ளியன்று (மார்ச் 11) தாக்கல் செய்தார். இரண்டாவது இடது ஜனநாயக முன்னணி அரசின் முழு பட்ஜெட்டாகும் இது. இந்த முறை முற்றிலும் காகிதமில்லா பட்ஜெட்டாக டேப்பைப் பார்த்து வாசிக்கப்பட்டது. இந்த காகிதம் இல்லாத பட்ஜெட் உரைக்கு சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் பாராட்டு தெரிவித்தார். கேரளா கடந்த காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பாராட்டத்தக்க சாதனைகளை செய்துள்ளது. கேரளாவில் சிறந்த ஆட்சி முறையும் உள்ளது. நிதியாண்டில், ஜிஎஸ்டி வருவாய் 14.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலக அமைதி மிகவும் சவாலானது. உலக அமைதிக்காக ரூ.2 கோடி ஒதுக்கப்படும். கேரளாவில் உலக அமைதி மாநாடு கூட்டப்படும். உயர்கல்வித் துறையில் விரிவான மாற்றங்கள் கொண்டுவரப்படும். பல்கலைக்கழகங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படும். பல்கலைக்கழகங்களில் 1,500 புதிய விடுதி அறைகளும் 250 சர்வதேச அறைகளும் கட்டப்படும். முதல்வரின் நவ கேரளா பெல்லோஷிப் 150 பேருக்கு வழங்கப்படும்.

பட்ஜெட்டில்  முக்கிய அறிவிப்புகள்

  •       மாவட்ட திறன் பூங்காக்களுக்கு ரூ.350 கோடி
  •        நுண்ணுயிரியல் சிறப்பு மையம் நிறுவப்படும்.
  •        5 ஜி மொபைல் சேவை துரிதப்படுத்தப்படும்.
  •         உயர்கல்விக்கு ரூ.200 கோடி.
  •       கண்ணூரில் புதிய தகவல் தொழில்நுட்பப்  பூங்கா
  •          கொல்லம் டெக்னோபார்க்
  •         நான்கு தகவல் தொழில்நுட்ப வழித்தடங்கள் அமைக்கப்படும்
  •          அரசு உதவியோடு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அரசு இண்டர்ன்ஷிப்
  •        பல்கலைக்கழகங்களுக்கு ரூ.200 கோடி.
  •        தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக கிப்பி மூலம் ரூ.100 கோடி.
  •        தகவல் தொழில்நுட்ப பூங்கா மேம்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்த ரூ.1000 கோடி. நான்கு அறிவியல் பூங்காக்கள் தொடங்க ரூ.1000 கோடி.
  •         திருவனந்தபுரத்தில் உலகளாவிய அறிவியல் விழாவிற்கு 4 கோடி ரூபாய்.

கிழங்கிலிருந்து  எத்தனால் உற்பத்தி

  •         மரவள்ளிக்கிழங்கில் இருந்து எத்தனால் தயாரிக்க திட்டம். ரப்பர் மானியத்திற்கு ரூ.500 கோடி. சிஐஏஎல் (CIAL) மாதிரியில் வேளாண் பொருட்கள்  சந்தைப்படுத்தல் நிறுவனம்.
  •       பாதி அளவில் படகுகள் சூரிய சக்தியில் இயக்கப்படும். நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ரூ.10 கோடி.
  •        2050-க்குள் கேரளாவில் கார்பன் வெளியேற்றத்தை ஒழிக்க வேண்டும்.
  •      விவசாயத் துறைக்கான செலவு ரூ.851 கோடி.
  •   நெல்லுக்கு ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடிக்கு ரூ.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  •        கிருஷி ஸ்ரீ சுய உதவிக்குழுக்களுக்கு 19 கோடி.
  •       வெள்ள நிவாரணத்துக்கு ரூ.140 கோடி. பயிர் பாதிப்பை தடுக்க ரூ.51 கோடி பல மாடி தொழிற்பேட்டைகளை மேம்படுத்த 10 கோடி ரூபாய்.
  •        தொழில் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.1226.66 கோடி அதிகரிப்பு.
  •         தென்னை நார்த் துறைக்கு 117 கோடி. முந்திரி தொழிலுக்கு ரூ.30 கோடி வட்டி நிவாரணம்.
  •        மின்னணு ஹார்டுவேர் மையத்திற்கு 28 கோடியும், சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டங்களுக்கு 10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  •      ஒரு குடும்பம் ஒரு தொழில் திட்டத்திற்கு ரூ.7 கோடி, வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ஊக்கத்தொகை.
  •       கைத்தறி - பள்ளி சீருடை திட்டத்திற்கு 140 கோடி.

ஐடி துறைக்கு  ரூ.555 கோடி

20 சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். ஐடி துறைக்கு ரூ.555 கோடி. மின் ஆளுமை மையத்திற்கு ரூ.3.5 கோடி. தரவு மையங்களுக்கு ரூ.53 கோடி. அஜீக்கல், கொல்லம், பேப்பூர் மற்றும் பொன்னானி துறைமுகங்கள் ரூ.41.5 கோடி. விழிஞ்சம் சரக்கு துறைமுகம் மற்றும் தங்கசேரி துறைமுகம் தலா ரூ.10 கோடி. ஆலப்புழா துறைமுகத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த ரூ.2.5 கோடி. பேப்பூர் துறைமுகத்தின் விரிவாக்கம்- வளர்ச்சிக்கு ரூ.15 கோடி. சுகாதாரத் துறைக்கு ரூ.2629 கோடி. காருண்யா திட்டத்திற்கு ரூ.500 கோடி. நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு ரூ.5 கோடி ரீபில்டு கேரளா திட்டத்திற்கு ரூ.1600 கோடி. கழிவு மேலாண்மைக்கான ஐந்தாண்டு திட்டம்.

உள்ளாட்சிக்கு  ரூ.12903 கோடி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.12903 கோடி. வறுமை ஒழிப்புக்கு ரூ.100 கோடி. ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலை பல்கலைக்கழக கட்டிடம் கட்டும் பணி இந்த ஆண்டு தொடங்கும். லத்தீன் அமெரிக்க ஆய்வு மையத்திற்கு ரூ.5 கோடி. பசுமை வளாகங்களுக்கு ரூ.2 கோடி. மலையாள பல்கலைக்கழக வளாகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோநக்கல்லில் ரூ.50 கோடியில் அதிநவீன ஆய்வுக் கூடம் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். திருவனந்தபுரம் ஆர்சிசி மருத்துவமனைக்கு ரூ.81 கோடி; இந்த நிறுவனம் மாநில மையமாக உயர்த்தப்படும். கொச்சி புற்றுநோய் மையத்திற்கு 14.5 கோடி. மலபார் புற்றுநோய் மையத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சிக்கு ரூ.427 கோடி உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு உதவி. அவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து தலையிட நோர்காவில் சிறப்புக் குழு: இதற்காக ரூ.10 கோடி. லாட்டரி விற்பனை மற்றும் கட்டமைப்பு கோவிட்க்கு முந்தைய நிலைக்கு மாற்றப்படும்

அங்கன்வாடியில்  பால்- முட்டை

அங்கன்வாடி மெனுவில் பால் மற்றும் முட்டைக்கு ரூ.61.5 கோடி போதை குறைந்த மதுபானம் தயாரிக்க கூடுதல் அலகுகள் துவக்கப்படும். புதிய போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும். காவல்துறைக்கு ரூ.149 கோடி. சிறை நவீனமயமாக்கலுக்கு ரூ.13 கோடி. வரி உயர்வு மூலம் ரூ.200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது நிலம் நியாய விலையில் பெறுவதில் உள்ள முறைகேடுகள் சரி செய்யப்படும். ரூ.2 லட்சம் வரையிலான மோட்டார் வாகனங்களுக்கு ஒரு முறை ஒரு சதவிகித வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட கால இலக்கு

நீண்ட கால இலக்குடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் செய்தியாளர்களிடம் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் நடைமுறைப்படுத்தக்கூடிய அனைத்தையும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.