கண்ணீரில் மூழ்கிய கரூர்
“இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்த வார்த்தைகள், கரூர் மாவட்டத்தில் நடந்த கொடிய கூட்ட நெரிசல் சம்பவத்தின் வலியை முழுமையாக வெளிப்படுத்துகிறது. செப்டம்பர் 27, 2025 சனிக்கிழமை மாலை, விஜய் அரசியல் பரப்புரைக்காக குவிந்த மக்கள் கூட்டம் எதிர்பாராத பேரழிவில் சிக்கி 40 அப்பாவி உயிர்களைப் பறித்துக் கொண்டது. இது தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக பதிந்துவிட்டது.
