கரூர் சேரன் பள்ளி மாணவி செஸ் போட்டிக்கு மாநில அளவில் தேர்வு
கரூர், ஆக.14- கரூர் மாவட்டம் வெண்ணமலையில் செயல்பட்டு வரும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி டி. கமலிகா, கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று 11 வயதிற்குட்பட்ட பிரிவில் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி டி. கமலிகாவை, பள்ளியின் செயலாளர் கே.பெரியசாமி, பள்ளியின் தாளாளர் கே.பாண்டியன், பள்ளியின் முதல்வர் வி.பழனியப்பன், பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். நளினிபிரியா ஆகியோர் பாராட்டி நினைவு பரிசை வழங்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.