நீதிபதிகள் நியமனம்
சென்னை, செப். 26 - 2023 அக்டோபரில் கூடு தல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்ட என். செந்தில் குமார் மற்றும் ஜி. அருள் முருகன் ஆகிய இருவரை யும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க செப்டம்பர் 15 அன்று உச்சநீதிமன்ற கொலீ ஜியம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், கூடு தல் நீதிபதிகளான என். செந் தில்குமார், ஜி. அருள்முரு கன் ஆகிய இருவரையும் நிரந் ந்தர நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
புதுதில்லி, செப். 26 - காவிரியில் தண்ணீர் திறக்க கர்நா டக அரசுக்கு காவிரி நதி நீர் மேலா ண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணை யத்தின் 44-ஆவது கூட்டம், அதன் தலை வர் எஸ்.கே ஹல்தார் தலைமையில், தில்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல். கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங் களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதி காரிகள் கலந்து கொண்டனர். கூட்டத் தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ கத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடகா தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டது. இறுதியில், இருதரப்பு வாதங் களையும் கேட்டறிந்த மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி ஆற்றில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா வழக்கில், ‘சோனி’க்கு உத்தரவு
சென்னை, செப். 26 - தனது அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தி வருவதாக, சோனி மியூசிக் எண்டர்டைண்மெண்ட், எக்கோ ரெகார்டிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், இளையராஜாவின் இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி சோனி நிறு வனம் ஈட்டிய வருமானம் எவ் வளவு? என கேள்வி எழுப்பி யது. இதுதொடர்பான வரவு - செலவுகளை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
அபராதத்துடன் மீனவர்கள் விடுதலை
இராமேஸ்வரம், செப். 26 - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங் கை கடற்படை கைது செய் தது. 2 மீனவர்களுக்கு ரூ. 2.50 லட்சம் (இலங்கை பணம்), மற்ற 2 மீனவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதிக்கப் பட்டது. 2-ஆவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக படகு உரி மையாளருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்த ரவிட்டிருந்தது. இந்நிலை யில், அவர்களில் 4 பேரை, அபராதத்துடன் இலங்கை நீதிமன்றம் வி