தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு உடல் தான இயக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மகத்தான மார்க்சிய அறிஞருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைந்து ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, செப்.12 (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் முதலாமாண்டு புகழஞ்சலி நிகழ்வுகள், உடல் தானம், கண் தானம் பத்திரம் வழங்கும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.