கராத்தே பிரதர்ஸ் அறக்கட்டளையின் கலைத் திறன் போட்டிகள்
அறந்தாங்கி, ஆக.27 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை யின் 26 ஆவது ஆண்டு தொடக்க விழாவின் நிறைவு நாள் கலைத் திறன் போட்டிகள் அறந்தாங்கியில் நடைபெற்றன. அறக்கட்டளையின் தலைவர் வி.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளைத் தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். பேச்சு, மாறு வேடம், நடனம், தங்கத் தம்பதியர் ஆகிய போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். விழாவில், ஏகப்பெருமாளூர் அரசுப் பள்ளிக்கு கணினியும், இடையங்காடு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திர மும், வைரிவயல் பள்ளிக் கணினி ஆய்வகத் திற்கு ஏ.சி.யும், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு 5 மின் விசிறிகளும், அரசு கல்லூரிக்கு எல்இடி டிவியும், அஞ்சலி என்ற பெண்ணுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டன. கலைத்திறன் போட்டிகளில் அதிக வெற்றிப் புள்ளிகளைக் குவித்த புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பள்ளி, இந்த ஆண்டுக் கான கே.பி. கல்சுரல் சாம்பியன்ஷிப் கோப் பையை வென்றது. விழாவில் திரைப்பட நடிகர் போஸ் வெங்கட், விஜய் டிவி புகழ் அறந்தை நிஷா, கழுகுமனை செ.சந்திரசேகரன், பி.வி. ரவிக்குமார், அறந்தாங்கி நகர்மன்றத் தலை வர் இரா.ஆனந்த், நகர்மன்ற துணைத் தலை வர் தி.முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.