tamilnadu

img

காஞ்சிபுரம் வருவாய்துறை சங்கங்களின் மாவட்ட முதல் கோரிக்கை மாநாடு

காஞ்சிபுரம் வருவாய்துறை சங்கங்களின்  மாவட்ட முதல் கோரிக்கை மாநாடு

காஞ்சிபுரம், ஆக 24- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கியமையன்று (ஆக 23)  காஞ்சிபுரம் ஏ.கே.ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மாவட்ட ஒருங்கினைப்பாளர்கள் கே.தனசேகரன், பி.நவீன்குமார், ஜி.பாலாஜி. இ.வெங்க டேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் எம்.கோவர்த்தனன் வரவேற்றார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநிலப் பொருளாளர் வி.தியாகராஜன் கோரிக்கை மாநாட்டை துவக்கி வைத்தும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் வி.சுந்தர்ராஜன் நிறைவு செய்தும் ஆகி யோர் பேசினர். மத்திய செயற்குழு உறுப்பி னர்  எஸ்.நவீன்குமார் கோரிக்கை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் என்.செண்பகம், எஸ்.மகாலிங்கம், கே.ராமமூர்த்தி, எம்.கார்த்திகேயன், ஜி.தயாளன், ஆர்.புரு ஷோத்தமன், எஸ்.கார்த்திகேயன், கே.செந்தில்குமார் சி.கிருஷ்ணமூர்த்தி, வி.லெனின், வி.தென்னரசு, என்.சாரங்கன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  கோரிக்கைகள் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். அனைத்து நிலை யிலான காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நிய மனத்தில் உச்சவரம்பு 5 சதவீதம் என்பதை ரத்து செய்து ஏற்கனவே இருந்தது போல் 25 சதவீதமாக மாற்றம் செய்ய வேண்டும். ஜூலை மாதம் 1ம் தேதி வருவாய்த்துறை தினமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.சதானந்தம் நன்றி கூறினார்.