tamilnadu

img

கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆர்.கே. நகரில் வியாழனன்று (பிப்.10) துவக்கினார்.  சென்னை மாநகராட்சி 40-ஆவது வட்டத்தில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.விமலாவுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் கோரினார்.  இதில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே. மகேந்திரன் ஆர்.லோகநாதன், விஜயகுமார், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்திக் குமார், திமுக பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், வட்டச் செயலாளர்கள் பரசுராமன், தேவன் உடனிருந்தனர்.