tamilnadu

img

திண்டுக்கல் மாநகராட்சியில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

திண்டுக்கல் மாநகராட்சி வேடபட்டி பகுதியில்35வது வார்டு சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஜோதிபாசு, 48வது வார்டு திமுக வேட்பாளர் காயத்ரி ஆகியோரை ஆதரித்து புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகர செயலாளர் அரபு முகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அஜாய்கோஷ், ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.