உலகம் முழுவதும் ஜூன் 1 குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் உரிமை - குழந்தைகள் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தில் நாடு முழுவதும் கருத்தரங்குகளும் பரப்புரை களும் பல்வேறு விதமான போட்டிகளும் நடந்து வரு கிறது. உலகத் தலைவர்களுக்கு குழந்தைகள் நலன் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்குமாறு வலியுறுத்து வது உட்பட பல வகையில் ஐ.நா.சபை வழிகாட்டு கிறது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வுரிமைகளும் சட்டம் ஆக்கப்பட வேண்டும். குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்து வருகிறது. 85 நாடு களில் குழந்தைகள் தினம் வெவ்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது.
சமீபகாலமாக குழந்தைகள் சுதந்திரமாக செயல் பட, நடமாட அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கக்கூடிய இச்சூழலில் அவர்களுக்கான அனைத்து உரிமைகளை யும் அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியா வில் மதவெறிக் கொள்கைகள் மிக வேகமாக மக்களி டையே பரப்பப்படும் மோசமான சூழலில், குழந்தை களைக் குறிவைத்து மதவெறியூட்டும் விஷமப் பிரச்சா ரங்களில் ஆர்எஸ்எஸ் - இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் பாடத்திட்டங்க ளில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரித்து, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாறுகளை சேர்க்கிற செயலில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் இத்த கைய நடவடிக்கைகளுக்கு எதிராக குரலை உயர்த்திட வேண்டியது அவசியமாகும்.
மேலும் ஒன்றிய - மாநில அரசுகள் குழந்தைகளுக் காக தனிக் கவனம் செலுத்தும் விதமாக குழந்தைகளைக் கொண்டே அவர்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கான கொள்கைகளை திட்டமிட்டு நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும் குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசுகள் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தை அரசு ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான கருத்தரங்கு கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டி கள், கட்டுரைப் போட்டிகள், தலைவர்களின் வரலாறு கள், சுதந்திரப் போராட்ட வரலாறு சம்பந்தமான போட்டி களை நடத்திட வேண்டும். வரும் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வுக் கல்வியை கொண்டு வர வேண்டும். மேலும் பள்ளிகளில் குறைந்த பட்சம் இரண்டு மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். குழந்தைகளின் உரிமைகளைக் காக்க சர்வதேச குழந்தைகள் நாளில் உறுதியேற்போம்!