tamilnadu

img

ஜூலை 9 பொது வேலைநிறுத்த கருத்தரங்கம்

ஜூலை 9 பொது வேலைநிறுத்த கருத்தரங்கம்

கரூர், ஜூலை 6 - ஜூலை 9 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஒன்றிய,  மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேலைநிறுத்த கருத்தரங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய, மாநில பொதுத்துறை அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கரூர் மாவட்ட கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 9 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்த கருத்தரங்கம் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழ கன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க  ஒருங்கிணைப்பாளர் ஐ.ஜான்பாஷா வர வேற்று பேசினார். தட்சிண ரயில்வே ஓய்வூதி யர் சங்க மண்டல தலைவர் ஆர்.இளங் கோவன் சிறப்புரையாற்றி னார். சிஐடியு மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் ஜ.ஜெயராஜ், எல்ஐசி ஊழியர்  சங்க தஞ்சை கோட்டை துணைத் தலை வர் என்.பெருமாள், வங்கி ஊழியர் சங்க  பொதுச் செயலாளர் கே.பிரசாந்த், டிஆர்பியூ  கிளைச் செயலாளர் எஸ்.நல்லமுத்து, எல்ஐசி  ஓய்வூதியர் சங்க தஞ்சை கோட்ட துணைத்  தலைவர் வி.கணேசன், அரசு அனைத்துத்  துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத்  தலைவர் டி.சாமுவேல் சுந்தரபாண்டி யன், மாவட்டச் செயலாளர் கெ.சக்தி வேல், என்சிசிபிஏ மாவட்ட தலைவர் என்.விஸ்வநாதன் ஆகியோர் பேசினர்.  ஜூலை 9 பொது வேலை நிறுத்த போராட் டத்தில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் -  ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள் ளும் ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு கரூர்  தலைமை தபால் அலுவலகம் முன்பு நடை பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.