tamilnadu

img

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

சென்னை, ஜூலை 6 - ஓய்வூதியர்களின் பிரச்ச னையை தீர்க்க முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்வ தாக தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உறுதி அளித் துள்ளார். போக்குவரத்து கழகத்தில்  ஓய்வு பெறும் தொழிலாளர்க ளுக்கு கடந்த 2 வருடங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இறந்த தொழிலாளர்களின் குடும் பத்திற்கு வழங்க வேண்டிய 3  லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியை யும் வழங்காமல் உள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் புதனன்று (ஜூலை 6)  தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்துக் கழக சட்டம், ஒப்பந்தப்படி பணப் பலன்களை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 மாதங்களாக உயர்த்தப்படாத அகவிலைப்படியை உயர்த்தி, நிலுவையுடன் வழங்க வேண்டும் என போராட்டத்தில் முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சென்னை கிளைத் தலைவர் எம்.நீலமேகம் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சம்பந்தம், காஞ்சி  மண்டலச் செயலாளர் இமயவர் மன், சென்னை எஸ்இடிசி மண்ட லச் செயலாளர் சண்முகம், சென்னை கிளை செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் எம்.ஏ.முத்துகுமார் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்து பேசினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.வீரராகவன், “மாந கர போக்குவரத்து கழகத்திலி ருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளுக்கு ஓய்வூதிய பலனாக 90 கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தோம். ஓய்வுக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இணை ஆணையர் உறுதி அளித்தார்” என்றார்.

;