புதுச்சேரி, ஜன.1- புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் உள்ள மொட்டை தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 36 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணையும் விழா உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி தலைமை யில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் ராஜாங்கம் கட்சிக் கொடியை ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் பெயர் பலகையை திறந்து வைத் தார். கிளைச் செயலாளர் அரிகிருஷ்ணன் கட்சியின் நோக்கங்களை எடுத்து ரைத்தார். மாதர் சங்கத்தின் பிர தேச செயலாளர் சத்தியா, சிஐடியு பிரதேச செயலா ளர் சீனுவாசன், சிபிஎம் பிரதேசக் குழு உறுப்பினர் ்கள் சரவணன், சஞ்சய் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.