“1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நாம் ஒரு முரண்பாடான வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மை யைப் பெற்றிருப்போம். அரசியலில் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு ஒரு வாக்கிற்கு ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டை நாம் அங்கீகரிப்போம். ஆனால் நம்முடைய சமூக, பொருளாதார அமைப்புக் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுப்போம். இந்த முரண்பாடுகளுடனான வாழ்வில் எவ்வளவு காலம்தான் தொடர்ந்து வாழ்வது? நம்முடைய சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவம் என்பதை எவ்வளவு காலம்தான் தொடர்ந்து மறுப்பது?
“அதை மறுப்பது நீண்ட காலத்திற்குத் தொடருமேயானால் அது நமது அரசியல் ஜனநாயகத்தின் நாசத்தில்தான் போய் முடியும். சாத்திய மான அளவு விரைவில் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும்; இல்லையென்றால் சமத்துவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த மன்றம் மிகுந்த உழைப்பினால் உருவாக்கியுள்ள அரசியல் ஜனநாயக அமைப்பைத் தகர்த்தெறிந்து விடுவார்கள்.”
- அம்பேத்கர்