ஐடியு விரைவு போக்குவரத்து சங்க மாநில மாநாடு திருச்சியில் ஜூலை 16, 17ஆம் தேதி நடத்த முடிவு
திருச்சி, ஜூலை 8- சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க திருச்சி கிளை 37ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பணிமனை தலைவர் ஜான் ஆச்சரியம் தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கம் பகுதி சிஐடியு ஒருங்கிணைப்பாளர் ரகுபதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைச் செயலாளர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். வேலையறிக்கையை பணிமனை செயலாளர் ராமையா வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை பணிமனை பொருளாளர் மகேந்திரன் சமர்ப்பித்தார். அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சம்மேளனக் குழு உறுப்பினர் முத்துவேல், மாநில துணைத்தலைவர் ஜெயராமன், மாநில தலைவர் அருள்தாஸ், டி.சி.டி.சி ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் கருணாநிதி, சிஐடியு அரசு போக்குவரத்து புதுக்கோட்டை கழகச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கூட்டத்தில், சிஐடியு விரைவு போக்குவரத்து சங்க மாநில மாநாட்டை ஜூலை 16, 17 ஆம் தேதி திருச்சியில் நடத்துவது மற்றும் கிளை நிர்வாகம் சீனியாரிட்டி அடிப்படையில் சுழல் முறை போஸ்டிங் அமல்படுத்த வேண்டும் ; பணி ஓய்வு பெறும்போதே பணப்பலனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஐ.லூர்து பால்ராஜ், செயலாளராக எம். அருண், பொருளாளராக பி. குளஞ்சிமுருகன் மற்றும் 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. மேலும் மாநில மாநாட்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் நடராஜன் நிறைவுரையாற்றினார். பொருளாளர் குளஞ்சிமுருகன் நன்றி கூறினார்.