tamilnadu

img

மிலேய் ஆட்சியில் தான் பொருளாதாரம் வீழ்ச்சி

அர்ஜெண்டினா மக்கள் கருத்து பியூனஸ்அயர்ஸ், ஜூன் 17- தீவிர வலதுசாரி ஜனாதிபதியான ஜேவியர் மிலேய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தங்கள் பொருளாதார நிலைமை மோசமாகிவிட்டது என அர்ஜெண்டினா மக்கள் தெரிவித்துள்ளனர்.  ஜூபன்-கோர்டோபா நடத்திய புதிய கருத்துக் கணிப்பில்   72 சதவீத மக்கள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.  மேலும் தற்போதைய பணவீக்கத்தால் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கு கூட இதுவரை வைத்திருந்த சேமிப்பில் இருந்து 50 சதவீதம் செலவழிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது என கவலை தெரிவித்துள்ளனர். நாட்டின் செலவுகளை குறைப்பதாகக் கூறிவிட்டு தனியார்  நிறுவனங்களுக்கு கதவை திறப்பதற்கும் , முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெட்டுவதற்கும் கார்ப்பரேட் நலச் சட்டத்தை அந்நாட்டு அரசு கடந்த வாரம் நிறை வேற்றியுள்ளது. இதன் காரணமாக அந்நாடு முழு வதும் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;