கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை
அமைச்சர் எ.வ.வேலு உரை
சென்னை, செப்.18- சென்னையில் நடைபெறுகிற நீலப் பொருளாதார மாநாடு-2025ஐ தொடங்கி வைத்து பேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலை யாய கடமை” என்றும், நீலப் பொரு ளாதார மாநாடு என்று சொல்வதை விட, இதனை நீலப் பொருளாதார கருத்தரங்கம் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் கடற்கரை பிற மாநில கடற்கரைகள் போல் அல்லாமல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளைக் கொண்ட ஒரு தீபகற்ப கடற்கரை பகுதியாகும். பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத் திற்கு மிக அருகாமையில் கடற்கரை கொண்ட பகுதியாகும். மேலும், தெற்கே நெருங்கிய உறவுகள் கொண்ட அண்டை நாடாக இலங்கை உள்ளது என்று கூறினார். 14 கடலோர மாவட்டங்கள் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு தரப்பினர். குறிப்பாக தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடற்கரை பகுதியிலேயே குடியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள், மீன்பிடி துறைமுகங்கள், மீன்வளர்ப்புப் பண்ணைகள், வணிக ரீதியாக ஒன்றிய மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகங்கள், மக்கள் பொழுது போக்கு கடற்கரை பகுதிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பகுதிகளான அலையாத்தி காடுகள், ஆமைகள் முட்டையிடும் பகுதிகள், மன்னார் வளைகுடா பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகள், பறவைகள் சர ணாலயங்கள், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கோவில்கள், தேவா லயங்கள், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள், கடலோர தொழில் பூங்காக் கள், கலங்கரை விளக்கங்கள் உள்ளன என்றும் எடுத்துரைத்தார். இந்த மாநாட்டில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுக ஆணை யத்தின் தலைவர் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலா ளர் டாக்டர் இரா.செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன் மைச் செயலாளர் வெங்கடேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத் தலை வர் சி.தேவராஜன் மற்றும் துறைமுக மேம்பாட்டாளர்கள், துறைமுக நிர்வாகிகள், துறைமுக பயனீட்டா ளர்கள், கடல்சார் சுற்றுலா சார்ந்த செயல்பாட்டாளர்கள், மீன்வள மற்றும் மீன்வளர்ப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள், கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் துறை வல்லு நர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்ட னர்.
