பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற தாக்குதல் நிவாரணப் பொருட்கள் சென்றகப்பல்கள் மீதும் இஸ்ரேல் குண்டுவீச்சு!
ஏதென்ஸ், செப். 25 - காசாவில் உள்ள பாலஸ் தீனர்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் செல்லும் ‘குளோபல் சுமூத் ஃப்ளோ ட்டில்லா’ (Global Sumud Flotilla) கப்பல்கள் மீது செப்டம்பர் 24 அன்று இஸ் ரேல் தாக்குதல் நடத்தி யுள்ளது. 2025 ஜூலை மாதம் காசா விற்கு கடல் வழியாக மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல புதிய சர்வ தேச கடல்வழித் திட்டம் ஒன்று துவங்கப்பட்டது. இதற்கு, ‘குளோபல் சுமூத் ஃப்ளோட்டில்லா’ என பெயர் சூட்டப்பட்டது. பாலஸ்தீனத்திற்குத் திரும்பும் உலகளாவிய இயக்கம், விடுதலைக் கப்பற் படை கூட்டமைப்பு, மக்ரெப் சுமூத் வாகனத் தொடர், தென் கிழக்கு ஆசிய நூசாந்தாரா சுமூத் முயற்சி ஆகிய நான்கு அமைப்புகள் மற்றும் சர்வ தேச பாலஸ்தீன ஆதர வாளர்கள் கூட்டமைப்பாக இணைந்து இந்த முயற்சி யை மேற்கொண்டனர். இந்த அமைப்பு 50 கப்பல்களில் நிவாரணப் பொருட்களுடன் 2025 செப்ட ம்பர் முதல் வாரம் தனது பயணத்தை துவங்கியது. இஸ்ரேலின் சட்டவிரோத தடைகளை உடைப்பது, பாலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவி களை வழங்குவது மற்றும் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் இனப்படு கொலை போரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டு வதே இந்த பயணத்தின் அடிப்படை நோக்கம் என அவர்கள் அறிவித்தனர். இந்த கப்பல்கள் கிரீஸ் நாட்டின் அருகே சென்ற போது இஸ்ரேல் ராணு வத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலின் ராணுவ டிரோன்கள் கப்பல்களுக்கு மேலே வட்டமிட்டு பலமுறை குண்டு வீசியுள்ளன. இந்த தாக்குதலில் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்தி கப்பலை மூழ்கடிப்பதற்கு பதிலாக கப்பல்களுக்கு அருகே குண்டுகளை வீசியும் டிரோன்களை அனுப்பியும் காசாவை நோக்கிச் செல்ப வர்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தத்தை உரு வாக்குகிறது என அக்கப்ப லில் பயணிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரி வித்துள்ளனர்.