tamilnadu

img

ருமேனியாவில் தலைகீழாகக் கட்டப்பட்டுள்ள வீடு

ருமேனியா, ஜூன் 25- விசித்திரமான விஷயங்கள் சுற்று லாப் பயணிகளை ஈர்க்கின்றன. அதனால் தான், சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள் போன்ற பகுதிகளில், பார்வையாளர்க ளை வியப்பில் ஆழ்த்துவதற்கும், அவர் களுக்கு தனி அடையாளத்தை வழங்கு வதற்கும் தனித்துவமாக ஏதேனும் ஒன்று செய்யப்படுகிறது.  ருமேனியாவின் பிரம்புரா அட்வென் சர் பூங்காவில் உள்ள வீடு சற்று வித்தி யாசமாகக் கட்டப்பட்டுள்ளது.  பிரம்புரா அட்வென்சர் பார்க், ருமேனியாவின் அவ்ரிக்கில், ஃபகாரஸ் மலைகளின் அடி வாரத்தில்  அமைந்துள்ளது. இங்கு  தலை கீழாக ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஒரு உணவுக்கூடம், ஒரு பார், ஒரு சிறிய மிருகக்காட்சிசாலை மற்றும் குழந்தைகளுக்கான நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.   இந்த வீட்டை வெளியிலிருந்து பார்த்தால் மேற்கூரை தரையை நோக்கி யும் வீட்டின் தரைப்பகுதி மேல்நோக்கி யும் இருக்கிறது. வீட்டினுள் நடந்தால் மேசை, நாற்காலிகள், உணவு ஆகியவை தலைக்குமேல் இருக்கும். அங்கு செல் லும் பார்வையாளர்களுக்கு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நிற்பது போன்ற ஓர் அற்புதமான உணர்வை வழங்குகிறது. வீட்டிற்குள் செல்பவர்கள் நிலைதடுமாறி, தலை சுற்றுவது போல இருக்கும் வித்தி யாசமான உணர்வைப் பெறுவார்கள். அடுத்த ஓரிரு மாதங்களில், தேசிய மற்றும் சர்வதேச பயணிகளை கவரும்  நம்பிக்கையில் இன்னும் வினோதமான கட்டமைப்புகள் மற்றும் ஈர்ப்புகளை உள்ளடக்கி பூங்காவை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

;