ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி அறிமுகம்!
இந்திய ரயில்வேயில் அனைத்து சேவைகளையும் ‘ரயில்ஒன்’ என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ரயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் தட்கல் டிக்கெட்கள் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட் (Rail Connect)’ புறநகர் ரயில்களில் பயண டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் பெறுவதற்கென ‘யு.டி.எஸ் (UTS)’ செயலி, ரயில்வேயில் புகார் களை தெரிவிக்கவும், பரிந்துரை களை வழங்குவதற்கும் ‘ரயில்மாடாட்’ (RailMadad) உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இந்திய ரயில்வேயில் உள்ளன. அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ரயில்ஒன்’ என்ற புதிய செயலி அறி முகம் செய்யப்பட்டுள்ளது. ரயில்ஒன் செயலியில், ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசார ணை உள்ளிட்ட அனைத்து சேவை களையும் பெறலாம். ஏற்கனவே RailConnect அல்லது UTS கணக்கு வைத்திருப்பவர்கள், அதே விவ ரங்கள் மற்றும் mPIN ஆகியவற்றின் மூலம் ரயில்ஒன் செயலியில் Login செய்ய முடியும். ரயில்ஒன் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு கிடைக்கிறது. விரைவான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளுக்காக ‘ஆர்-வாலட் (R-Wallet)’ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் கண்காணிப்பு செயலியை கண்டறிவது எப்படி?
ஹேக்கர்கள் அல்லது சமூக விரோதிகள் தவறான நோக்கங்களுக்காக கண்காணிப்பு செயலியை (Spy App) ஒரு நபரின் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து அவரின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் ஒருவரின் மொபைலுக்கு வரும் மெசேஜ்கள், அழைப்புகள் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் திருட முடியும். இது போன்ற கண்காணிப்பு செயலி உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சில எளிய வழிகளை பார்க்கலாம். முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் அசாதாரண செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். குறிப்பாக கண்காணிப்பு செயலிகள் ஸ்மார்ட்போனில் செயல்திறனில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. • உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி, வழக்கத்தை விட வேகமாக தீர்ந்துவிட்டால், அதன் பின்னணியில் கண்காணிப்பு செயலி இருக்கக்கூடும். இதனை கண்டறிய Settings > Battery-க்கு சென்று எந்த செயலி அதிகமாக உங்கள் பேட்டரியின் சக்தியை பயன்படுத்து கிறது என்பது சரி பார்க்கவேண்டும். • கண்காணிப்பு செயலிகள் உங்கள் டேட்டா பயன்பாட்டை அதிகரிக்கும். டேட்டா பயன்பாட்டை கண்டறிய Settings > Network & Internet > Data Usage ஆகியவற்றுக்கு சென்று சரி பார்க்கவேண்டும். • உங்கள் ஸ்மார்ட்போன், பயன்படுத்தாத நிலையிலும் அதிகமாக வெப்பமடைந்தால், அது ஏதோ ஒரு செயலி, நாம் பயன்படுத்தாத நிலையிலும் செயல்படுகிறது, என்பதை காட்டுகிறது. • அழைப்புகளின் போது, கிளிக் செய்யும் ஒலி (Clicking Sound) கேட்பது, செயலிகள் தானாகவே திறந்து மூடுவதை காண முடியும். • கண்காணிப்பு செயலிகள், உங்கள் ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்டதாகவும் அல்லது வேறு பெயர்களில் காணப் படலாம். எனவே ஆண்ட்ராய்டு போனில் Settings > Apps > All Apps-க்கும் சென்று சந்தேகத்திற்குரிய செயலிகள் இருக்கின்றனவா என்று சரிபார்க்கவும். “Show system apps” என்பதை Enable செய்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து App Permission, Synced accounts மற்றும் Network Activity ஆகியவற்றை சரிபார்ப்பதன் மூலம் தரவுகள் சேமிக்கப்படுகின்றதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.