tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

யூடியூப் ஷார்ட்ஸ்-இல்  புதிய அம்சம் அறிமுகம்!

யூடியூப்பில் ஷார்ட்ஸ் (youtube Shorts) வீடியோக்கள் பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ‘டைமர்’ (Timer) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் தினமும் ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்க்கும் நேரத்தை முன்னதாக நிர்ணயிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிந்தவுடன், யூடியூப் தானாகவே ஷார்ட்ஸ் வீடியோவை இடைநிறுத்தி, “உங்கள் ஸ்க்ரோலிங் நேரம் முடிந்துவிட்டது” என்ற அறிவிப்பை காட்டும். இதை தொடர்ந்து, வரும் மாதங்களில் Parental control வசதியுடன் கூடிய வடிவத்தில் இந்த அம்சத்தை விரிவுபடுத்த யூடியூப் திட்டமிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் ஷார்ட்ஸ் பார்ப்பதற்கான நேரத்தை பெற்றோர்கள் நிர்ணயிக்க முடியும். ஏற்கனவே, யூடியூப்பில் 15, 30, 60 மற்றும் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை நினைவூட்டும் ‘Take a Break’ மற்றும் தூங்கும் நேரத்தை நினைவூட்டும் ‘Bedtime Reminder’ போன்ற வசதிகள் இருந்தாலும், அவை பயனர்கள் விரும்பினால் மட்டுமே பின்பற்றப்படும் வகையில் இருந்தன. ஆனால், ஷார்ட்ஸ் டைமர் அம்சத்தில் நிர்ணயித்த நேரத்தை தாண்டி ஷார்ட்ஸ் வீடியோக்கள் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபன் ஏஐ-இன் புதிய ஏ.ஐ ப்ரவுசர் அறிமுகம்!

பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) அட்லஸ் என்ற புதிய ஏ.ஐ ப்ரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடி அட்லஸ் ப்ரவுசர்  வசதி, தற்போது மேக் (Mac) பயனர் களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ப்ரவுசரின் முகப்பு பக்கத்தில் தேடல் மற்றும் சாட் வசதிகள் வழங்கப் பட்டுள்ளன.  இதில், இணைய இணைப்புகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகள் என பிரித்து தேடல்களை மேற்கொள்ளலாம். பயனர்கள் தேடல் மேற்கொள்ளும்போது சூழல்  உதவி (contextual assistance) மற்றும் ‘ஏஜென்ட் மோட்’ (Agent Mode) போன்ற வசதிகள் வழங்கு கிறது. பயனர்கள் தங்கள் ப்ரவுசரி லேயே நேரடியாக ChatGPT-ஐ அணுக முடியும். வேறு டேப்-க்கு செல்லாமலே, தகவல்களின் சுருக்கங்கள் மற்றும் விளக்கங்களை பெறலாம். இதில் முந்தைய உரையாடல்கள் மற்றும் தேடல்கள் ஆகியவை Browser Memory-இல் சேமிக்கப்படுகிறது. இதனால் பயனர்கள் காலப்போக்கில் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். பயனர்கள், விரும்பினால், உரையாடல்களை browser memory-இல் இருந்து நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.  ப்ரவுசர் பயன்பாட்டிற்கு இலவசம் என்றாலும், அதன் முக்கியச் சிறப்பம்சமான ‘ஏஜென்ட் மோட்’ (Agent Mode), ப்ரோ (Pro), ப்ளஸ் (Plus) மற்றும் எண்டர்பிரைஸ் (Enterprise) சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எதிர்காலத்தில் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் அட்லஸ் ப்ரவுசரை அறிமுகப்படுத்த ஓபன் ஏ.ஐ. திட்டமிட்டுள்ளது. சாட் ஜிபிடி இன்ஸ்டால் செய்வது எப்படி: 1) www.chatgpt.com/atlas என்ற லிங்குக்கு சென்று, இன்ஸ்டாலரை பதிவிறக்கம் செய்யவும். 2) பதிவிறக்கம் செய்யப்பட்ட (..dmg file) - ஐ திறக்கவும். 3) அதிலுள்ள Atlas ஐகானை Applications folder-க்கு டிராக் செய்யவும். 4) Finder-இல் இருந்து installer disk image-ஐ Eject செய்யவும். 5) Applications கோப்பகத்திலிருந்து அல்லது Spotlight Search (⌘+ Space) மூலம் Atlasஐ திறக்கவும். 6) macOS பாதுகாப்பு (security) தொடர்பான எச்சரிக்கை வந்தால், அவற்றுக்கு அனுமதி (Approve) வழங்கவும். 7) உங்களிடம் ChatGPT கணக்கு (account) இருந்தால், அதன் மூலம் Login செய்து பயன்படுத்தலாம். 8) விருப்பத்துக்கேற்ப (Optional), உங்கள் தற்போதைய ப்ரவுசரிலிருந்து புத்தகக்குறிகள் (bookmarks), கடவுச்சொற்கள் (passwords), மற்றும் உலாவல் வரலாறு (browsing history) ஆகியவற்றை இறக்குமதி (import) செய்யலாம்.