இடைக்கால பட்ஜெட்: துறைவாரி நிதி ஒதுக்கீடு
தமிழக சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண் டுக்கான இடைக்கால பொது பட்ஜெட்டு செவ்வா யன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. இதில் துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்கள் வருமாறு: * சமூகத் திட்டங்கள் அனைத்திற்கும் சேர்த்து ரூ.5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்புத் திட்ட செயலாக்கத்திற்கு ரூ.17,088 கோடி யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * பொதுப் பணித்துறை: ரூ.1,694 கோடி ஒதுக்கீடு. கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், சேலம், திரு நெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும். * சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை (MSME): ரூ.1,943 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் 40 லட்சம் MSME நிறுவனங்கள் இயங்கி வருகின்றன; கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10.7 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 18 புதிய சிட்கோ தொழிற் பேட்டைகளில் 3,735 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. * தகவல் தொழில்நுட்பம்: ரூ.219 கோடி ஒதுக்கீடு. ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பி லான IT ஏற்றுமதி. சென்னையில் 250 உலக ளாவிய திறன் மையங்கள்; கோவை, மதுரை, திருச்சி யிலும் புதிய மையங்கள் வருகின்றன. நாட்டிலேயே முதன் முறையாக ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனக் கொள்கை அமல்படுத்தப் பட்டுள்ளது. * நீர்வளத்துறை: ரூ.10,076 கோடி ஒதுக்கீடு. சென்னைக்கு அருகே திருப்போரில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்க அண்மையில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். 87 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ரூ.15,591 கோடியில் செயல்படுத்தப்பட்டு 1 கோடியே 65 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். * எரிசக்தி மற்றும் மின்சாரம்: ரூ.18,091 கோடி ஒதுக்கீடு. 100 பில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது. * போக்குவரத்துத் துறை: ரூ.13,062 கோடி ஒதுக்கீடு. மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.4,000 கோடி, மாணவர்கள் பேருந்து பாஸ் திட்டத் திற்கு ரூ.1,782 கோடி, டீசல் மானியத்திற்கு ரூ.1,857 கோடி ஒதுக்கீடு. * நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள்: ரூ.21,132 கோடி ஒதுக்கீடு. தேனாம் பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி யில் மேம்பாலம், மடிப்பாக்கத்தில் ரூ.45 கோடியில் வாகன சுரங்கப்பாதை, மதுரை கோரிப்பாளை யத்தில் ரூ.199 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி கள் நடைபெற்று வருகின்றன. 5 ஆண்டுகளில் 1,085 கி.மீ சாலைகள் ரூ.8,313 கோடியில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டுள்ளன; 42 உயர் மட்டப் பாலங்கள், 46 ரயில்வே பாலங்கள், 30 புற வழிச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. * மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு: ரூ.22,090 கோடி ஒதுக்கீடு. தூத்துக்குடியில் ரூ.5,200 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்ப டும்; ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முன்னணி கப்பல் நிறுவனங்களுடன் ரூ.30,000 கோடி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்: ரூ.3,934 கோடி ஒதுக்கீடு. பழங்குடியினர் குடி யிருப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.300 கோடி; பழங்குடியினர் வீடு கட்டுமானத்திற்கு ரூ.755 கோடி; மானியமாக ரூ.420 கோடி வழங்கப்பட்டுள்ளது. * இந்து சமய அறநிலையத் துறை: ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்; 4,100 கோவில்களில் குட முழுக்கு. 1,048 கோவில்களுக்கு சொந்தமான ரூ.8,163 கோடி மதிப்புடைய நிலங்கள் ஆக்கிரமிப்பா ளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. * சிறுபான்மையினர் நலம் மற்றும் பிற்படுத் தப்பட்டோர் நலம்: ரூ.1,634 கோடி ஒதுக்கீடு. 5 ஆண்டுகளில் 90,773 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் மேம்பாட்டிற்கு ரூ.58 கோடி; பழ மையான தேவாலயங்கள் புனரமைப்பிற்கு ரூ.25 கோடி; உலமாக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது; சென்னையில் ரூ.39 கோடியில் ஹஜ் இல்லம். * சுற்றுலாத் துறை: ரூ.1,394 கோடி ஒதுக்கீடு. சுற்றுலா வருகையாளர்களில் தமிழ்நாடு நாட்டி லேயே இரண்டாம் இடத்தில் உள்ளது; 30.79 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை. ரூ.22,794 கோடி முதலீட்டில் 127 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். அதிகம் அறியப்படாத 22 சுற்றுலாத் தலங்கள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப் படுகின்றன; பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. * கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளம்: ரூ.4,435 கோடி ஒதுக்கீடு. ரூ.758 கோடியில் பால் பண்ணைகள் நவீனமயமாக்கப்படுகின்றன. இராம நாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடி மீன்பிடித் துறைமுகம், பாம்பனில் ரூ.58 கோடி, குந்துகாலில் ரூ.148 கோடியில் மீன்பிடி இறங்குதள வசதிகள் என மொத்தம் ரூ.356 கோடி பணிகள் நடை பெற்று வருகின்றன. * போதைப்பொருள் ஒழிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் 17,000 போதை எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; பல்துறை ஒருங்கிணைப்பு இயக்க மேலாண்மை செயல்பட்டு வருகிறது. * புதிய டைடல் பூங்காக்கள்: ரூ.1,070 கோடி முதலீட்டில் திருச்சி ராப்பள்ளி, மதுரை, ஓசூர் ஆகிய மூன்று நகரங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. * டைடல் நியோ மினி IT பூங்காக்கள்: விழுப்பு ரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக் குடி, திருப்பூர் ஆகிய 7 இடங்களில் ஏற்கனவே திறக்க ப்பட்டு ள்ளன. நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை என 9 இடங்களில் ரூ.388 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 25,500 புதிய வேலை வாய்ப்புகள். * செமிகண்டக்டர் இயக்கம் 2030: அடுத்த 5 ஆண்டுகளில் செமிகண்டக்டர் துறையில் முன்னேற ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
