tamilnadu

img

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் இலங்கையின் ஜேவிபி குழு சந்திப்பு சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி - தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன்  இலங்கையின் ஜேவிபி குழு சந்திப்பு சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி - தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

திருவனந்தபுரம் இலங்கையில் “ஜனதா விமுக்தி பெரமுன (ஜே விபி - மக்கள் விடுதலை முன்னணி)” தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. ஜனாதிபதியாக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலை வர் அனுர குமார திசாநாயக்க செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இந்தியாவு க்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனதா விமுக்தி பெரமுன கட்சி யின் (ஜேவிபி) பிரதிநிதிகள் குழுவி னர் பிப்., 11ஆம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஜேவிபி பொதுச் செயலாளர்  எம்.டில்வின் சில்வா தலைமையி லான இந்த பிரதிநிதிகள் குழுவில், ஜேவிபி மத்தியக்  குழு உறுப்பி னர் ஜனக அதிகாரி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், கருணநா தன் இளங்குமரன், ஊடகப் பிரி வுத் தலைவர் காமேதிகே ஹேமதி லக, ஜேவிபி கட்சியின் வெளியுற வுத் துறை உறுப்பினர் கல்பனா மது பாஷினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இடதுசாரி ஜனநாயக சக்திகள் முதலமைச்சர் பினராயி விஜ யன், நிதியமைச்சர் கே.என். பால கோபால் உடனான ஜேவிபி கட்சி யின் பேச்சுவார்த்தை பிராந்தி யத்தில் உள்ள முற்போக்கு மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகளு க்கு இடையிலான வளர்ந்து வரும்  பிணைப்பை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது. மேலும் இந்தியா - இலங்கை  நாடுகளுக்கு இடையி லான மக்கள் ரீதியிலான உறவு களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான கலாச்சாரப் பரிமாற்றங்களை ஆழப்படுத்துவது குறித்து விவா திக்கப்பட்டது. ஜனநாயகம், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய விழு மியங்களை முன்னெடுப்பதில் முற் போக்கு சக்திகளின் உறு திப்பாட்டை இந்தச் சந்திப்பு பிரதி பலித்தது. ஏ.கே.ஜி மையம் தொடர்ந்து ஜேவிபி கட்சியின் பிரதிநிதிகள் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலத் தலைமையகமான ஏ.கே. ஜி மையத்திற்கு சென்றது. சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.எம்.தாமஸ் ஐசக், டி.பி.ராம கிருஷ்ணன், புத்தலத்து தினேசன் ஆகியோர் ஜேவிபி பிரதிநிதிகள் குழுவை வரவேற்றனர். ஏ.கே.ஜி மையத்தில் எம்.ஏ.பேபி தலைமை யில் இரு நாட்டு இடதுசாரி இயக்கங்களுக்கு இடையிலான கட்சி ரீதியான உறவுகளை வலுப் படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் பேசிய எம்.ஏ. பேபி,”ஜே.வி.பியின் வெற்றி இப் பிராந்தியத்தில் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள் ளது. இலங்கையில் இடதுசாரி அரசியலின் எழுச்சியானது சமூக நீதி, இறையாண்மை மற்றும் மக்கள் நல மேம்பாட்டிற்காகப் போ ராடும் ஜனநாயக இயக்கங்க ளின் நம்பிக்கையை வலுப்படுத்தி யுள்ளது” என தெரிவித்தார்.