tamilnadu

img

மயிலாடுதுறையில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறையில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை, ஆக. 29-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து நடத்தும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், பள்ளி புத்தகக் மேம்பாட்டு திட்டத்தினை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தில் யுனிசெப் நிறுவனமானது அறிவுசார் பங்குதாரராக இணைந்து செயல்படுகிறது. ஆண்டுதோறும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு, அவர்கள் கண்டறியும் புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ஒரு லட்சம் வரை 60 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியில்,  மாவட்டத்திலிருந்து 104 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்து சுமார் 160 ஆசிரியர்களுக்கு  நடைபெறுகிறது.  இப்பயிற்சியில் பள்ளிகளை எப்படி இணையதளத்தில் பதிவு செய்வது, பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் குறித்து எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையதளம் கற்றலை எவ்வாறு நிறைவு செய்வது, புத்தக சிந்தனைகளை எப்படி உருவாக்குவது, அதனை இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, குமரவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மயிலாடுதுறை மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.