சென்னை, ஜன.10- 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற நிலையை எட்டும் வகையில் தொலைநோக்கு திட்டங்களுடன் செயல் பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை பழவந்தாங்கலில் நட்சத்திர விடுதியில் நிகழ்ந்த ஐ.எஸ்.பி.ஏ.சி.ஓ.என் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் புதிய தொழில்களை உருவாக்கவேண்டும் என்றார். தொழில் வளர்ச்சி நிதியை மட்டு மில்லாமல் நீதியையும் நிலைநாட்டுவதாக முதலமைச்சர் கூறினார்.